செய்தி வட அமெரிக்கா

மீண்டும் அமெரிக்க ஜனாதிபதியானால் அகதிகளை தடுத்து நிறுத்துவேன் – டிரம்ப் அறிவிப்பு

மீண்டும் அமெரிக்க ஜனாதிபதியானால் அகதிகளை தடுத்து நிறுத்துவேன் என ஜனாதிபதி வேட்பாளர் டிரம்ப் தெரிவித்தள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தாம் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், அமெரிக்காவை முன்னெப்போதையும்விட சிறப்பானதாகவும், துணிச்சலானதாகவும், பாதுகாப்பானதாகவும், வலிமையானதாகவும் மாற்றுவேன் என டிரம்ப் தெரிவித்தார்.

பென்சில்வேனியாவில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தி விலைவாசியைக் குறைப்பேன் என்று உறுதி அளித்தார்.

அமெரிக்காவை நோக்கிப் படையெடுக்கும் அகதிகளை தடுத்து நிறுத்துவதுடன், வெளிநாட்டினரின் வருகையையும் கட்டுப்படுத்துவேன் என்றும் டிரம்ப் தெரிவித்தார்.

பைடன் அரசால் கடந்த நான்கு ஆண்டுகளாக அனைத்துவிதங்களிலும் தோல்வி அடைந்த அமெரிக்காவை மீட்டெடுக்க தமக்கு வாக்களிக்கும்படி அவர் கேட்டுக்கொண்டார்.

நாட்டு மக்களின் கனவை நனவாக்க தமக்கு மீண்டும் ஒரு வாய்ப்புக் கிடைக்க வழி ஏற்படுத்திக் கொடுத்ததாக பைடனுக்கும் கமலாவுக்கும் அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

(Visited 85 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி