செய்தி விளையாட்டு

புதிய விதிகளை விரைவில் அறிவிக்கும் ஐசிசி..!

டெஸ்ட் போட்டிகளுக்கு கூடுதல் விறுவிறுப்பை ஏற்படுத்தும் வகையில் புதிய விதிகளை ஐசிசி கொண்டு வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி தொடர் முடிந்துள்ள நிலையில் அதில் தென்னாப்பிரிக்கா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இனி 2027 ஆம் ஆண்டு நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான ஆட்டங்கள் தொடங்க உள்ளன.

இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளை கூடுதல் விறுவிறுப்பாக்கும் விதிகளை கொண்டு வருவதற்கு ஐசிசி திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் போது ஐசிசியின் உயர்மட்ட குழு கூட்டம் கூடி சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.

இதன் அடிப்படையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் முன்னிலை வகிக்கும் நாடுகளில் தற்போது உள்ள முறையில் 5 நாட்கள் டெஸ்ட் போட்டிகள் நடைபெறும்.

ஆனால் மிகச் சிறிய நாடுகள் அல்லது வருமானம் குறைவாக உள்ள கிரிக்கெட் வாரியங்கள் டெஸ்ட் போட்டிகளை நடத்தும் போது அதில் போட்டித் தொடர் 4 நாட்கள் கொண்டதாக மாற்றி அமைப்பதற்கு ஐசிசி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் மூலம் சிறிய நாடுகளும் டெஸ்ட் போட்டிகள் விளையாடுவதற்கு ஆர்வம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 4 நாட்களில் போட்டி முடியும் என்பதால் ஆட்டம் கூடுதல் விறுவிறுப்புடன் இருக்கும் என கிரிக்கெட் நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்.

சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.

(Visited 7 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி