செய்தி விளையாட்டு

ஐசிசி டெஸ்ட் தரவரிசை : மீண்டும் முதலிடம் பிடித்து ஜஸ்பிரித் பும்ரா

இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடனான 5 போட்டிகள் அடங்கிய பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

அதில், முதலாவதாக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணியின் டெஸ்ட் தரவரிசையின் புள்ளி சற்று அதிகரித்துள்ளது. மேலும், இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் அந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக செயலபட்ட பும்ரா தான். முதல் போட்டியில் ரோஹித் சர்மா பங்கேற்க முடியாததால் பும்ரா தலைமையேற்றார்.

ஆனால், போட்டிக்கு முன்பு அவர் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டது. இருப்பினும், அந்த போட்டியில் 72 ரன்கள் விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டை எடுத்து தனது சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தியிருந்தார். இதனால், அந்த போட்டியின் ஆட்டநாயகனாகவும் தேர்வானார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐசிசி பவுலிங் தரவரிசையில் 3-வது இடத்தில் இருந்த பூமரா இந்த போட்டிக்கு பிறகு, மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். மேலும், அந்த பட்டியலில் அவருக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் தென்னாபிரிக்க அணியின் ககிஸோ ரபாடாவும், 3-ஆம் இடத்தில் ஆஸ்திரேலியா அணியின் ஜோஸ் ஹஸில்வுட்டும் இருந்து வருகின்றனர்.

(Visited 29 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி