(UPDATE) இலங்கை கிரிக்கெட்டுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடைக்கு ஐசிசி அங்கீகாரம்!
இலங்கை கிரிக்கெட்டுக்கு தடை விதித்து சர்வதேச கிரிக்கெட் பேரவை நவம்பர் 10ஆம் திகதி எடுத்த தீர்மானத்திற்கு இன்று (21.11) நடைபெற்ற ஐசிசி நிர்வாக சபை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், கிரிக்கட் தடை நீடித்தாலும், இலங்கை தேசிய அணி பங்கேற்கும் போட்டிகளுக்கு அது பாதிப்பை ஏற்படுத்தாது என உரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆனால் சர்வதேச கிரிக்கெட் பேரவை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட பணத்தை கடுமையான கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு விடுவிக்க தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இந்த சந்திப்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா கலந்து கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
(Visited 3 times, 1 visits today)