இங்கிலாந்து வெற்றி பெறும் என நினைத்தேன் – ஏமாற்றத்தில் ஸ்டூவர்ட் பிராட்

இந்திய கிரிக்கெட் அணி மற்றும் இங்கிலாந்து அணிகள் இரண்டும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிய நிலையில், இதில் 2 போட்டியில் இங்கிலாந்து அணியும், 2 போட்டியில் இந்தியா அணியும் வெற்றிபெற்றது. 1 ஒரு போட்டி ட்ராவில் முடிந்தது. எனவே, இந்த தொடரில் இரண்டு அணிகளும் தலா 2 போட்டிகளில் வெற்றிபெற்ற காரணத்தால் தொடர் முடிவு இல்லாமல் சமநிலையில் முடிந்தது. சமநிலையில் முடித்தாலும் கூட இந்த தொடரில் நடந்த 5 போட்டிகளும் பரபரப்பாக இருந்தது என்று தான் சொல்லவேண்டும்.
உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரை நடந்த 5-வது போட்டியை சொல்லலாம். இந்த போட்டியில், வெற்றிபெற்றால் மட்டும் தான் தொடரை சமன் செய்ய முடியும் என்கிற நிலையில் இந்திய அணி விளையாடியது. போட்டியின் ஐந்தாவது நாள் (ஆகஸ்ட் 4, 2025) ஆட்டம் தொடங்கியபோது, இங்கிலாந்து அணி போட்டியில் வெற்றிபெற 35 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், நான்கு விக்கெட்டுகள் மட்டுமே மீதமிருந்தன. இந்தியாவுக்கு வெற்றிக்கு இந்த விக்கெட்டுகள் தேவைப்பட்டன.
போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற வாய்ப்பு இருந்தபோதிலும் அந்த வாய்ப்பை தவறவிட்டு போட்டியில் தோல்வியடைந்தது இங்கிலாந்து ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் ஏமாற்றத்தை அளித்தது. எனவே, போட்டியில் தோல்வியடைந்தது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் பேசி வருகிறார்கள். அந்த வகையில், இங்கிலாந்து அணியின் பிரபல கிரிக்கெட் வீரரான ஸ்டூவர்ட் பிராட் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்டபோது இது குறித்து பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் ” நான் மிகவும் நேர்மையாக சொல்லவேண்டும் என்றால் உண்மையில் நான் இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றுவிடும் என நினைத்தேன். போட்டி பரபரப்பாக சென்று கொண்டிருந்தபோது ஜேமி ஸ்மித் இரண்டு பவுண்டரிகள் அடிப்பார், எல்லாம் அமைதியாகிவிடும் என்று நினைத்து நான் வந்தேன். விக்கெட்டுகளை எடுக்க இந்தியா ஃபீல்டர்களை உள்ளே கொண்டு வர வேண்டும், பின்னர் ரன்கள் சுதந்திரமாக வந்தன.
எப்படியாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றிபெறும் என நினைத்தேன் ஆனால் நடக்கவில்லை. மேகமூட்டமாக இருந்த சரியான காலைப் பொழுதுகளில் இங்கிலாந்து சிறப்பாக விளையாடியது. காற்றில் சிறிது தூறல் இருந்தது, பந்து 76 ஓவர்கள் பழையது, ஆனால் எல்லா இடங்களிலும் சென்றது. அதே மாதிரி விளையாடி இருந்தால் வெற்றிபெற்று இருக்கலாம்” எனவும் ஸ்டூவர்ட் பிராட் கூறினார்.