செய்தி விளையாட்டு

கேப்டன்சிக்காக யாரிடமும் கெஞ்சியதில்லை.. மிடில் ஆர்டரில் விளையாட தயார்

ஐபிஎல் தொடரில் கேப்டன்சி பொறுப்பை கொடுத்தால் மட்டுமே விளையாடுவேன் என்று அந்த அணியின் உரிமையாளர்களிடமும் கேட்டதில்லை என்று கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார்.

கேப்டனாக செயல்பட எனக்கு தகுதி இருப்பதாக கருதினால், அந்த பொறுப்பை செய்ய தயாராக இருப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் கடந்த 5 ஆண்டுகளாக நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் கேப்டனாகவே விளையாடி வருகிறார்.

பஞ்சாப் அணியுடன் 2 ஆண்டுகள் கேப்டனாக விளையாடிய அவர், பின்னர் 3 ஆண்டுகளாக லக்னோ அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்தார்.

பஞ்சாப் அணியில் இருந்த போது சில முடிவுகளில், அந்த அணியின் உரிமையாளர்கள் எடுத்த முடிவு இவருடன் ஒத்துப் போகவில்லை.

இதனால் லக்னோ அணியில் இருந்து அளிக்கப்பட்ட ஆஃபரை கேஎல் ராகுல் ஏற்றுக் கொண்டார்.

தற்போது லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கொயங்காவுடன் பணியாற்றியது இன்னும் மோசமான அனுபவமாக இருந்ததால், கேஎல் ராகுல் அடுத்ததாக எந்த அணிக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

5 ஆண்டுகளில் கேப்டனாக கேஎல் ராகுல் முதிர்ச்சியடைந்திருந்தாலும், பேட்ஸ்மேனாக சொதப்பி இருக்கிறார்.

இதன் காரணமாக இம்முறை கேஎல் ராகுலை வாங்கும் அணிகள், அவரை பேட்ஸ்மேனாக மட்டுமே களமிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிஎஸ்கே, ஆர்சிபி, கேகேஆர் ஆகிய 3 அணிகளில் ஏதேனும் ஒரு அணியால் வாங்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஐபிஎல் கேப்டன்சி குறித்து கேஎல் ராகுல் பேசுகையில், யாரிடமும் சென்று எனக்கு கேப்டன்சி பொறுப்பு கொடுங்கள் என்று கேட்டதில்லை.

கேப்டன்சிக்கு நான் சரியானவனாக இருந்தால், ஐபிஎல் அணியை என்னால் சிறப்பாக வழி நடத்த முடியும் என்று நம்பினால் பொறுப்பை அளிக்க போகிறார்கள்.

அதேபோல் கடந்த 4 முதல் 5 ஆண்டுகளாக எனது கேப்டன்சியை அனைவரும் பார்த்துள்ளார்கள்.

அதனால் கேப்டனாக இருக்க தகுதியிருக்கிறது என்று அவர்களுக்கு தோன்றினால், அந்த பொறுப்பை ஏற்றுக் கொள்வதில் எனக்கும் எந்த தயக்கமும் கிடையாது.

அதற்காக கேப்டன்சி கொடுத்தால் மட்டுமே விளையாடுவேன் என்பதெல்லாம் கிடையாது.

ஒரு சிறந்த சூழலை கொண்டுள்ள அணியின் அங்கமாக இருக்க வேண்டும் என்பதே விருப்பம்.

உரிய மரியாதையுடன் ஐபிஎல் கோப்பையை வெல்லும் நோக்கத்திற்காக அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்.

அதுதான் தற்போதைய சூழலில் என் தேவையாக உள்ளது.

அதேபோல் தொடக்க வீரர் என்று கிடையாது. எந்த இடத்திலும், எந்த ரோலிலும் விளையாட தயாராக இருக்கிறேன்.

தொடக்க வீரர், மிடில் ஆர்டர், விக்கெட் கீப்பர், ஃபீல்டர், ஃபினிஷர் என்று எந்த ரோலையும் செய்ய தயாராக உள்ளேன்.

மேலும், ஆர்சிபி அணியில் தான் சுதந்திரமாக விளையாடியதாக உணர்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

(Visited 1 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி