ஈஸ்டர் கொலை சூத்திரதாரிதாரியின் தகவல் என் கையில் இருக்கிறது – கம்மன்பில
ஈஸ்டர் தின தாக்குதல் சூத்திரதாரி தொடர்பான தகவல் என் கையில் இருக்கிறது அரசாங்கம் இச்சூத்திரதாரி தொடர்பான தகவல்களை நாட்டு மக்களுக்கு வழங்கிவிட்டால் தான் அத்தகவல்களை வெளிப்படுத்துவதாக பிவிதுரு ஹெல உறுமயவின் செயலாளர் உதயகம்மன்பில கூறுகிறார்.
இன்று அக்கட்சியின் காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் கலந்துரையாடலின் போது அவர் இத்தகவலை தெரிவித்துள்ளார்.
இவ்விடயமாக அவர் தொடர்ந்து தகவல் தருகையில் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அறிக்கையில் சில தாள்கள் காணாமல் போயுள்ளதாக அமைச்சர் விஜித் ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஆனால் அறிக்கையில் தாள்கள் எதுவும் காணாமல் போகவில்லை அதில் தேசிய பாதுகாப்புக்கு பாதகத்தை ஏற்படுத்தும் என விசாரணை கமிஷன் அடையாளப்படுத்தி இருந்த சில பக்கங்கள் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டு இருக்கவில்லை.
இதற்குக் காரணம் அவ்வாறு தவிர்க்கப் பட்ட அந்த தாள்களில் (பிரிவில்) தான் இத்தாக்குதலின் சூத்துரதாரி என கூறப்படுபவரின் தகவல்கள் அடங்கி இருக்கின்றன.
இப்பிரிவின் தாள்களை முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கத்தோலிக்க சபையில் பொறுப்பளித்து இருந்தார்.
ஏனையவர்களின் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு விட்டதால் இளைப் பாறிய நீதியரசர் SI IMAN அவர்களின் அறிக்கையை தான் கத்தோலிக்க சபையும் நாட்டு மக்களும் கேட்கிறார்கள்.
அத்துடன் இளைப்பாறிய நீதியரசர் ANJ THE ALVIS அவர்களின் அறிக்கையையும் வெளியிடுங்கள் ஜனாதிபதி காரியாலயத்தில் இருந்தும் சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்தும் உங்களால் பெற முடியாது அறிக்கை என் கைவசம் இருக்கிறது.
முறையாக நியமிக்கப்பட்ட குழு ஒன்றின் அறிக்கையை நாங்கள் வழங்குவது பொருத்தம் இல்லை அதனால் நான் அதை வெளியிட விரும்பவில்லை.
நாட்டை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் தகவலை துரிதமாக வழங்குமாறு எச்சரிக்கை விடுக்கிறோம்.
அந்த அறிக்கைகளை திருடுவதற்காக என் காரியாலயத்தை இரவில் உடைக்க எவரும் வர வேண்டாம். அவற்றை நான் பாதுகாப்பாக இணையத்தில் பதிவிட்டுள்ளேன்.