சாணக்கியனை போல் நான் இல்லை – தமிழீழ விடுதலை இயக்க செயலாளர் குற்றச்சாட்டு
எல்லா மரத்திலும் மரங்கொத்தி கொத்தி இறுதியாக வாழை மரத்தில் மரங்கொத்தி கொத்தினால் என்ன நடக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கு தெரியும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
பாராளுமன்ற அமர்வு இல்லாத காலத்தில் எனக்கு வாக்களித்த மக்களுக்கு என்னால் முடிந்தவரை அவர்களை சந்தித்துசெய்துகொண்டிருக்கின்றேன்.சாணக்கியனைப்போன்று ஆண்டுக்கொருதடவை மாவட்டத்திற்கு வந்து ஒரு பத்திரிகையாளர் மாநாட்டையும் ஒரு ஆர்ப்பாட்டத்தையும் செய்துவிட்டுப்போகும் பாராளுமன்ற உறுப்பினர் நான் அல்ல எனவும் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
பௌத்த பிக்குகள் இந்த நாட்டை ஆளுகின்றார்களா அல்லது மக்கள் பிரதிநிதிகள் அல்லது அரசாங்கம் இந்த நாட்டை ஆளுகின்றதா என்கின்ற ஒரு கேள்விக்குறி ஒட்டுமொத்த மக்கள் மத்தியிலே இருக்கின்றது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
நேற்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் ஊடக நிலையத்தில் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர அவர்கள் ஒரு செய்தியினை குறிப்பிட்டு இருக்கின்றார் இலங்கையில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அழிந்தாலும் அவர்களது தமிழீழக் கனவு அறியவில்லை எனக் கூறியிருக்கின்றார்.
உண்மையில் தற்போதைய நிலையினை பார்க்கும் போது 2009 ஆம் ஆண்டு எங்களுடைய ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டு இருந்தாலும் அதற்கு முன்பு தமிழ் ஈழம் தான் தமிழர்களின் ஒரே இலக்கு என்று தமிழர்கள் பயணித்துக் கொண்டிருந்த நிலைமை தற்போது இன்னமும் வீரியமடைய கூடிய ஒரு நிலைக்கு மக்களது மனநிலை மாறி இருக்கின்றது.
ஏனென்றால் 2009 க்கு பின்பு சர்வதேசத்தின் உதவியுடன் பூரை முடிவுக்கு கொண்டு வந்த அரசு சர்வதேசத்திற்கு இந்த தமிழர்களது இனப் பிரச்சினையினை அவர்களது அபிலாசைகள் நிறைவேறும் அளவிற்கு 13வது திருத்தச் சட்டத்திற்கு மேலாக 13 பிளஸ் பிளஸ் அமுல்படுத்தி நாங்கள் தீர்த்து வைப்போம் என்று கூறிய இந்த நாட்டின் அரசு தொடர்ச்சியாக வடகிழக்கு தமிழர்களை குறிப்பாக மிகவும் மன வேதனைக்கு உட்படுத்தும் ஒரு செயல்களைத் தான் செய்து கொண்டிருக்கின்றது.
வடக்கு கிழக்கு பௌத்தமயமாக்கும் நோக்கத்துடன் மாத்திரம் அல்லாமல் வடக்கு கிழக்கிலே சிங்கள மக்களை குடியேற்றி தமிழர்களது தாயக பிரதேசமான வடக்குக் கிழக்கை கபிளீகரம் செய்து இங்கு தமிழர்களின் குடி பரம்பலை குறைக்கும் நடவடிக்கைகளிலே ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது.
இதற்கு முக்கிய காரணமாக கோத்தபாயவுடன் இணைந்து இயங்கிய வியட் கம என்கின்ற அமைப்பு முக்கிய பங்கினை வகிக்கின்றது அந்த அமைப்பிலே முக்கியமான ஒருவர்தான் இந்த முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர அவர்கள்.
இந்த நாட்டின் அரசு மாறி மாறி ஆண்டி கொண்டிருக்கின்ற அரசினுடைய நிலைப்பாடு தமிழர்களின் தனிநாட்டு கோரிக்கையினை இன்னும் உறுதியாக்கும் நிலைப்பாட்டிற்கு அவர்கள் இருக்கின்றார்கள் அந்த வகையில் தான் மட்டக்களப்பு மாவட்டத்திலும் கூட கிழக்கு மாகாணத்திலே திருகோணமலையினையும் அம்பாறை மாவட்டத்தையும் தங்களது குடியேற்றத்தின் ஊடாக தமிழர்களை முதன்மை இடத்திலிருந்து இன்று இரண்டாம் இடத்திற்கு திருகோணமலைையிலும் அம்பாறை மூன்றாம் இடத்திற்கும் கொண்டு சென்றவர்கள் தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் தங்களது கைங்கரியத்தை செய்வதற்கு தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
குறிப்பாக தற்போதைய நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மயிலத்தமாடு மாதவனை பிரதேசத்திலே அயல் மாவட்ட சிங்களவர்களை கொண்டு வந்து சேனை பயிர்ச்செய்கை என்கின்ற ரீதியிலே குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இருக்கின்றது.
எங்களுடைய மாகாண சபை காலத்திலே இந்த வேலை திட்டம் நடைபெற்ற போது நாங்கள் அதை தடுத்து நிறுத்தி இருந்தோம் அந்த பிரதேசத்திற்கு சேனை பயிர்செய்கைக்காக வந்த பெரும்பான்மை மக்களை நாங்கள் அங்கிருந்து வெளியேற்றி இருந்தோம்.
ஆனால் தற்போது இருக்கும் ஆளுநருக்கு முதல் இருந்த அனுராதா யஹம்பத் அவர்கள் அவரும் வியட்கம அமைப்பிலே ஒரு முக்கியமான ஆளாக இருந்தவர் தன்னுடைய காலத்திலேயே இந்த மயிலத்தமடு மாதவனை பிரதேசத்தில் பெரும்பான்மையின மக்களின் ஆக்கிரமிப்பை தூண்டி இருந்தார்.
அதேபோன்று தற்போது ஆளுநராக இல்லாமல் சென்று விட்டாலும் கூட பின்புறத்தில் இருந்து இந்த ஊடுருவலை சேனை பயிர்செய்கை மூலமாக ஆக்கிரமிப்பவர்களை தூண்டிக்கொண்டு இருப்பதாக நாங்கள் அறிகின்றோம்.
ஜனாதிபதி அவர்கள் கடந்த சனி ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தந்திருந்தார் அப்போது இரண்டு மூன்று பௌத்த பிக்குகள் அம்பிட்டிய சுமணரத்ன தேரர் அவர்களின் தலைமையிலே மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது மாத்திரமில்லாமல் ஜனாதிபதியின் கட்டவுட்டிற்கு தும்புத்தடியால் அடிக்கும் நிகழ்வுகளை இந்த உலகம் முழுதும் பார்த்திருக்கின்றது.
இதை ஒரு தமிழரோ அல்லது தமிழ் பேசும் மக்களோ அல்லது அவர்களது மதகுருக்களோ செய்திருந்தால் இந்த நாட்டில் என்ன நடந்திருக்கும் பௌத்த பிக்குகள் இந்த நாட்டை ஆளுகின்றார்களா அல்லது மக்கள் பிரதிநிதிகள் அல்லது அரசாங்கம் இந்த நாட்டை ஆளுகின்றதா என்கின்ற ஒரு கேள்விக்குறி ஒட்டுமொத்த மக்கள் மத்தியிலே இருக்கின்றது.
அந்த பௌத்த விக்குகள்தான் வியக்கமா என்கின்ற அமைப்புடன் இணைந்து வடகிழக்கை இன்று கபலிகரம் செய்து கொண்டிருக்கின்றார்கள் அந்த வகையில் புதிதாக மைலத்தமடு மாதவனை பிரதேசத்திலே ஒரு பௌத்த விகாரையை அமைத்து அங்கு ஒரு பௌத்த பிக்கு புதிது புதிதாக ஆட்களை கொண்டு வந்து அந்த பிரதேசத்தில் சேனை பயிர்செய்கை ஊடாக நிறுத்துவதன் மூலம் அங்கிருக்கும் பண்ணையாளர்களை காலம் காலமாக பல ஆண்டுகளாக அந்த பிரதேசத்தில் தங்களது மாடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும் பண்ணையாளர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு அந்த பிரதேசத்திற்கு சென்ற பத்திரிகையாளர்களையும் சமூக சேர்ப்பாளர்களையும் பௌத்த பிக்கு சிறைபிடித்த கைங்கரியம் கூட அந்த பிரதேசத்தில் நடைபெற்று இருந்தது.
இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் பண்ணையாளர்கள் தங்களது மாடுகளை வயல் பிரதேசத்தில் இருந்து இன்று பெரும் போக வேளாண்மை செய்யும் காலம் நெருங்கி விட்டது தொடங்கிவிட்டது ஆனால் தங்களது மாடுகளை மயிலத்தமடு மாதவனை பிரதேசங்களுக்கு கொண்டு செல்ல முடியாமல் இருக்கின்றது.
ஒரு பக்கம் இந்த மாவட்டத்தின் வேளாண்மை செய்கையை தொடங்குவதற்கு விவசாயிகள் மாடுகளை அப்புறப்படுத்துமாறு கூறுகின்றார்கள் மாடுகளை பண்ணையாளர்கள் அந்த மேச்சல் தலைக்கு கொண்டு போக முயற்சிக்கும் போது அந்த பிரதேசத்தில் ஊடுருவியிருக்கும் பெரும்பான்மையினர் சேனை பயிர்ச்செய்கை என்கின்ற கோதாவிலே மாடுகளை அங்கு கொண்டு செல்வதற்கு தடையாக இருக்கின்றார்கள்.
பண்ணையாளர்கள் மாடுகளை எங்கே கொண்டு செல்வது ஆற்றிலா கடலிலா அவர்கள் மாடுகளைக் கொண்டு மேய்ப்பது இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் நான் நினைக்கின்றேன் 29 நாட்களாக இந்த பண்ணையாளர்கள் சுழற்சி முறையிலான உண்ணாவிரதத்தை அகிம்சை போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள் ஜனாதிபதி அவர்கள் கடந்த சனி ஞாயிற்றுக்கிழமை இங்கு வந்து அவர்களது ஒரு சில பிரதிநிதிகளை சந்தித்து இந்த செவ்வாய்க்கிழமைக்கு இடையில் ஒரு தீர்வு தருவேன் என்று சென்றிருந்தார் ஆனால் இன்று வெள்ளிக்கிழமை ஆகிவிட்டது எந்த ஒரு தீர்வும் இல்லை.
இந்த ஜனாதிபதியின் செயற்பாடு அதுதான் காலத்தை இழுத்தடிப்பதும் மக்களை ஏமாற்றி அரசியல் நடத்துவதும் தான் இந்த ஜனாதிபதியின் செயல்பாடு என்பது நாங்கள் அறிந்த உண்மையான விடயம் இந்த பண்ணையாளர்களது விடயமாக நாங்கள் பலமுறை இந்த மாவட்டத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டங்களில் பேசியிருக்கின்றோம் பல ஆர்ப்பாட்டங்களை செய்திருக்கின்றோம் பாராளுமன்றத்திலே பேசி இருக்கின்றோம் ஒத்திவைப்பு பிரேரணைகளையும் கூட கொண்டு வந்து பாராளுமன்றத்திலே பேசி இருக்கின்றோம் ஆனால் எதுவுமே நடைபெறுகின்றது இல்லை.
மட்டக்களப்பு மாவட்டத்தை பொருத்தமட்டில் 5 பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றார்கள் ஒருவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து அவர் கட்சி மாறி அரச தரப்பிலே அமைச்சராக இருந்து இன்று அவரது பதவியினை இழந்து இருக்கின்றார் அதற்கு பதிலாக புதியவர் வர இருக்கின்றார் தமிழ் மக்கள் மத்தியில் இருந்து நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு இருந்தோம் அதிலே இருவர் அரச தரப்பில் ராஜாங்க அமைச்சர்களாக இருக்கின்றார்கள் நாங்கள் இருவர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடாக தெரிவு செய்யப்பட்டு இன்று இந்த மக்களுக்காக குரல் கொடுத்து கொண்டிருக்கின்றோம் வேலை செய்து கொண்டிருக்கின்றோம்.
நான் நினைக்கின்றேன் என்னுடைய சக பாராளுமன்ற உறுப்பினர் தம்பி சாணக்கியன் அவர்கள் நேற்று ஒரு ஊடக மாநாட்டை நடத்தி இருந்தார் அவர் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் குறை கூறியிருந்தார் எல்லாம் மரங்களிலுமே மரங்கொத்தி கொத்தி கடைசியாக வாழை மரத்திலே மரக்கொத்தி கொத்தினால் என்ன நடக்கும் என்பது தம்பி சாணக்கியனுக்கு தெரியும் அவர் என்னைப் பற்றியும் அந்த பத்திரிகையாளர் மாநாட்டிலே குறை கூறியிருந்தார்.
அவரது கேள்வி நகைப்புக்குரியதாக இருந்தது இன்னும் ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் என்று என்னை குறிப்பிட்டு அவர் எங்கே இருக்கின்றார் என்று தெரியாது என்று கூறிவிட்டார் அவருக்கு மாத்திரம் அல்ல அவருக்குத் தெரியாமல் இருக்கலாம் ஏனென்றால் அவர் மாவட்டத்தில் இல்லை இங்குள்ள மாவட்ட மக்களுக்கு தெரியும் பாராளுமன்ற அமர்வுகள் அற்ற நாட்களிலே எனக்கு வாக்களித்த இந்த மாவட்ட மக்களின் தேவைகளை என்னால் முடிந்த அளவிற்கு நான் அவர்களை சந்தித்து செய்து கொண்டிருக்கின்றேன் அவரைப் போன்று ஆண்டுக்கு ஒருதடவை ஆவணிக்கு ஒரு தடவை தான் நினைத்த நேரம் மாவட்டத்திற்கு வந்து ஒரு பத்திரிகையாளர் மாநாட்டையும் ஒரு ஆர்ப்பாட்டத்தையும் செய்து விட்டுப் போகும் பாராளுமன்ற உறுப்பினர் நான் அல்ல.
நல்லதோ கெட்டதோ எனக்கு வாக்களித்த மக்களுடன் நான் இந்த மாவட்டத்தில் நிற்கின்றேன் அவருக்குத் தெரியாமல் இருக்கலாம் நான் எங்கு இருக்கின்றேன் என்று ஏனென்றால் அவர் மாவட்டத்தில் இருந்தால்தான் அவர் நான் எங்கு இருக்கின்றேன் என்று தெரியும் அதை விடுத்து இன்னும் ஒரு விடயத்தையும் கூறியிருந்தார் கடந்த பாராளுமன்ற அமர்விலே மயிலத்தமடு மாதவனை அந்த பண்ணையாளர்களுக்கு ஆதரவாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நான் கலந்து கொள்ளவில்லை என்பது உண்மை நான் கலந்து கொள்ளவில்லை.
கடந்த பாராளுமன்ற அமர்விலே வெள்ளிக்கிழமையிலே அந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது வியாழக்கிழமை நான் பாராளுமன்றத்திற்கு உள்ளே சிற்றுண்டி சாலையிலே இருந்தபோது சாணக்கியன் அவர்கள் என்னை வந்து சந்தித்தார் என்னை குழுக்காட்டி என்னுடன் கிட்டத்தட்ட 15 நிமிடம் என்னுடைய மணிவிழா சம்பந்தமாக கலந்துரையாடி அவரும் பக்கத்து மேசையில் இருந்து சாப்பிட்டார்.
அதற்குப் பின்பு நான் வெளியேறி பாராளுமன்றத்தை விட்டு வெளியேறி போகும்போது என்னுடைய வாகனத்திற்கு உள்ளே இருக்கும்போது பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலாதன் அவர்கள் தொலைபேசி அழைப்பினை எனக்கு எடுத்து நிற்கின்றீர்களா என கேட்டார் ஏனென்றால் சாணக்கியன் அவர்கள் பேச இருக்கின்றார் பேசி முடித்தவுடன் அவர் ஒரு ஆர்ப்பாட்டம் செய்வதாக எங்களிடம் கூறினார் நின்றால் வாருங்கள் என்று.
ஏன் ஒரே மாவட்டத்தைச் சேர்ந்த நான் அவரை சந்திக்கும் போது பத்து பதினைந்து நிமிடங்கள் என்னுடன் பேசும் போது இந்த மாவட்ட பிரச்சனை சம்பந்தமாக என்னுடன் அவர் பேசவில்லை சார்ஜ் நிர்மலா நாதன் நான் வாகனத்தில் ஏறிய போது கூறுகின்றார் நான் அன்று பங்கு பெற்ற வில்லை அன்று ஆர்ப்பாட்டம் இடம்பெறவில்லை அடுத்த நாள் காலையில் என்னுடைய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வினோ லோகதாரலிங்கம் பேசுவதற்கான நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது முதல் நாள் ஆட்கள் போதாமையினால் அந்த ஆர்ப்பாட்டத்தை செய்யவில்லையாம் என்றும் எனக்கு ஒரு பத்திரிகையாளர் கூறினார்.
அடுத்த நாள் அதை செய்யப் போவதாகவும் ஆனால் ஜனா அண்ணனிடம் இதனை கூற வேண்டாம் என இன்னும் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கூறியதாகவும் எனக்கு ஒரு பத்திரிகையாளர் கூறினார் நான் கொழும்பிலே தான் நிற்கின்றேன் செல்வம் அடைக்கலநாதன் இருக்கின்றார் சுமந்திரன் இருக்கின்றார் சான்ஸ் நிர்மலாநாதன் இருக்கின்றார் தமிழ் மக்கள் சம்பந்தமாக பாராளுமன்றத்திற்கு உள்ளே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றால் நாங்கள் ஒற்றுமையாக எல்லோருக்கும் அறிவித்து அதனை செய்திருந்தால் அது ஒரு பிரயோசனமாக இருந்திருக்கும்.
அது மாத்திரமல்ல கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மலையகத்திலே பிரச்சனை ஏற்பட்ட போது நான் ஸ்ரீதரன் உட்பட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அந்த மலையாக மக்களுக்காக மலையக பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து நாங்கள் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தினோம் அவர்களை கூப்பிட்டு இருந்தால் கூட அவர்களும் வந்திருப்பார்கள்.
தனிப்பட்ட ரீதியிலே அரசியல் செல்வாக்கை பெற வேண்டும் மற்றவர்களை ஓரம் கட்ட வேண்டும் என்று செய்துவிட்டு இன்னும் ஒருவரை குற்றம் சாட்டுவது என்பது ஏற்றுக்கொள்ள விடயம் நான் எதனை கூற வருகின்றேன் என்றால் மாவட்டத்திலே பாராளுமன்ற தேர்தல் நடக்கும் போது பல கட்சிகளில் இருந்தும் பல சுயேச்சை குழுக்களில் இருந்தும் பல பேர் போட்டியிடுவார்கள்.
நான் நினைக்கின்றேன் கடந்த பாராளுமன்ற தேர்தலில் 356 வேட்பாளர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலே போட்டியிட்டார்கள் ஆனால் வென்றது 5 பாராளுமன்ற உறுப்பினர்கள் நாங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக வந்ததன் பிற்பாடு என்னுடைய நிலைப்பாடு முழுவதும் நான் இந்த மாவட்ட மக்களின் பிரதிநிதிகளே தவிர எனக்கு வாக்களித்த மக்களுக்கான பாராளுமன்ற உறுப்பினர் அல்ல என்பதனை மனதில் நிறுத்தி பாராளுமன்ற உறுப்பினராக செயல்பட வேண்டும்.
எனவே இந்த மாவட்டம் மாகாணம் வடகிழக்கு மாகாணங்கள் அல்லது இந்த நாடு உருப்படியாக இருக்க வேண்டும் என்றால் எங்களுடைய இனப்பிரச்சனைக்கு நிரந்தரமான தீர்வை கொண்டு வந்து எங்களை நாங்களே ஆளக்கூடியவாறு சுயாட்சி உருவாகினால் இந்த நாடு உருப்படும் உருப்படக்கூடிய நிலையில் இருக்கும்.
அப்படி இல்லாமல் விட்டால் இந்த நாடு எதிர்காலத்திலே பிரிவதற்கான சாத்திய கூறுகள் தான் இருக்கும் என்பதனை இந்த சிங்கள பெரும்பான்மை கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும் சரத் வீரசேகர கூறியது போன்று தமிழ் மக்கள் மத்தியிலே இருந்து இன்னமும் இந்த தனி நாடு தமிழ் ஈழம் என்கின்ற நினைப்பு விலகவில்லை விலகாமல் இருப்பதற்கு நீங்கள் தான் முடிவெடுக்க வேண்டும்.
ஐ.எம்.எப் இன் சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்குவதாக ஏற்கனவே ஒட்டுக்கொண்டது அந்த வகையில் முதல் கட்ட நிதியினை வழங்கி இருந்தார்கள் வழங்கியதுடன் கடன் மறுசீரமைப்பை செய்யுமாறு கூறியிருந்தார்கள் உள்ளூர் கடன் மறு சீரமைப்பையும் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பையும் செய்ய வேண்டும் என்ற நிபந்தனைகளை விதித்திருந்தார்கள் இரண்டாவது கட்டம் உதவியை செய்வதற்காக.
உள்ளூர் கடன் மறுசீரமைப்பிலே ஓரளவிற்கு இலங்கை திருப்தியான வேலை திட்டங்களை செய்திருந்தாலும் வெளிநாட்டு கடன் மறு சீரமைப்பிற்கு சீனாவை தவிர அனைத்து நாடுகளும் ஒத்துழைப்பு வழங்கினார்கள் சீனா கூட நான் நினைக்கின்றேன்.
இன்றைய சூழ்நிலையில் 4 பில்லியனுக்கு மேற்பட்ட கடன்களை மறுசீரமைப்பிற்கு ஒத்துக் கொண்டிருப்பதாக செய்திகள் வந்திருக்கின்றது அவ்வாறு சீனாவும் கடன் மறுசீரமைப்பிற்கு ஒத்துக் கொண்டால் இரண்டாம் கட்ட நிதியினை கூடிய விரைவில் வருவதாக செய்தியினூடாக பார்க்கக் கூடியதாக இருக்கின்றது.
இலங்கையிலே பால் உற்பத்தியில் எங்களுடைய மாவட்டம் கணிசமான பங்கை வகித்திருந்தாலும் ஆனால் அந்த பால் உற்பத்திக்குரிய மாடுகளை நாங்கள் வளர்ப்பதில்லை அதாவது பால் உற்பத்திக்கான மாடுகள் ஒரு நாளைக்கு 20 25 லிட்டருக்கு மேல் பால் கறக்கும் ஆனால் நாட்டு மாடுகளோ குறிப்பிட்ட அளவு ஒரு சில லீட்டர் பால்களையே கரப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.
ஜனாதிபதி அவர்களது கூற்றிலே நான் நினைக்கின்றேன் இத்தனை லட்சம் மாடுகள் இருந்தார் உங்களுக்கு இத்தனை ஆயிரம் ஹெட்டேயர் நிலங்கள் மேய்ச்சல் தரைக்கு தேவைப்படும் அதை விடுத்து நீங்கள் பால் கறக்கக்கூடிய மாடுகளை அதாவது 100 மாடுகள் வைத்திருப்பவர்கள் மூன்று நான்கு மாடுகள் வைத்திருந்தால் போதும் என்கின்ற நிலையிலே அவர் கருத்து கூறியிருக்கலாம்
ஆனால் அவர் புத்திசாலித்தனமாக அந்த கருத்தை கூறியிருக்க வேண்டும்.அந்த மாடு வளர்வதற்கான நிலை எங்களது மாவட்டத்திலே இல்லை மலையகத்தை பொருத்தமட்டிலே அவ்வாறான மாடுகளை கௌசல்யாவிலிருந்து இந்தியாவின் வடக்கு மாநிலங்களில் இருந்தோ அல்லது வேறு நாடுகளிலோ இருந்தோ கொண்டு வந்து வளர்க்கலாம் ஆனால் மட்டக்களப்பில் அப்படியான கால சூழ்நிலை இல்லை என்பதற்கு மேலாக மட்டக்களப்பு மக்கள் தங்களது மாடுகளை பால்காரப்பதற்காகவோ அல்லது முற்றுமுழுதாக இறைச்சிக்கு விற்பதாகவோ வளர்ப்பதில்லை.
அந்த மாடு மாட்டு பண்ணையினை இந்த மாவட்டத்தை பொருத்தவரையில் அவர்களுடைய சொத்து அதாவது தங்களது வீட்டு விசேடங்களுக்காகவோ தூக்க நிலைகளுக்கோ ஏதாவது ஒன்று இரண்டு மாடுகளை விற்று தங்களது வீட்டு செலவுகளை பார்ப்பார்கள் அப்படி இல்லாவிட்டால் திருமணத்தில் கூட சீதனமாக மாடுகளை கொடுக்கும் வழக்கம் தான் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்றது அதற்கும் இதற்கும் வேறுபாடுகள் இருக்கின்றது.
மேச்சல் தரையை சுருக்க வேண்டுமானால் மாடுகளை குறைக்க வேண்டும் என்கின்ற அடிப்படையில் அவர் அந்த கருத்தை கூறி இருக்கின்றார் அப்படி இருந்தாலும் கூட அயல் மாவட்டம் மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் அயல் மாவட்டங்களான அம்பாறையில் இருந்தோ பலனார்வையிலிருந்து மக்களை கொண்டு குடியேற்ற வேண்டிய தேவையில்லை.
அம்பாறை மாவட்டத்தில் சேனை பயிர்ச்செய்கை செய்வதற்கு எத்தனையோ ஆயிரக்கணக்கான ஹெக்டேர் நிலங்கள் இருக்கின்றுனு.அங்கு அவர்களை குடியேற்றமுடியும் என்றார்.