அமெரிக்காவில் வலுப்பெற்று வரும் கிகோ சூறாவளி : புயல் தாக்கம் குறித்து விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

அமெரிக்காவில் கிகோ சூறாவளி பலவீனமடைந்த சிலமணி நேரங்களுக்கு பிறகு மீண்டும் வலுப்பெற்றுள்ளது.
சூறாவளி ஹவாய்க்கு அருகில் வருவதால், வார இறுதி முழுவதும் புயல் தாக்கம் குறித்த எச்சரிக்கைகளை அமுற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் வரும் வாரத்தில் திங்கட்கிழமை அதிகாலையில் வெள்ளம் மற்றும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
ஹவாயின் 1.5 மில்லியன் குடியிருப்பாளர்கள் இப்போதே தயாராக இருக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
‘தயாராக வேண்டிய நேரம் இது’ என்று ஓஹு அவசர மேலாண்மை அறிவுறுத்தியுள்ளது. புயலின் மையம் தீவுகளுக்கு வடக்கே சென்றாலும் பாதிப்புகள் உணரப்படலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
கிகோ தற்போது மேற்கு-வடமேற்கு நோக்கி மணிக்கு சுமார் 10 மைல் வேகத்தில் நகர்கிறது, அடுத்த சில நாட்களில் இந்த பாதை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.