அமெரிக்காவை தாக்கிய டெவின் புயல் – ஆயிரக்கணக்கான விமானங்கள் இரத்து!
அமெரிக்காவை தாக்கிய டெவின் புயல் காரணமாக ஆயிரக்கணக்கான விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக 1,802 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும், மேலும் 22,349 விமானங்கள் தாமதமாகியதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நியூயார்க்கின் ஜான் எஃப். கென்னடி (New York’s John F. Kennedy Airport) விமான நிலையம், நியூவார்க் லிபர்ட்டி (Newark Liberty) சர்வதேச விமான நிலையம் மற்றும் லாகார்டியா (LaGuardia) விமான நிலையம் ஆகியவை பயண தாமதங்கள் குறித்த உத்தியோகப்பூர்வ அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.
விமான ரத்து மற்றும் தாமதங்களில் பாதிக்கும் மேற்பட்டவை இந்த மூன்று விமான நிலையங்களில் நடந்ததாக FlightAware தெரிவித்துள்ளது.
ஜெட் ப்ளூ ஏர்வேஸ் 225 விமானங்களை இரத்து செய்துள்ளது. அதேநேரம் டெல்டா ஏர் லைன்ஸ் 212 விமானங்களையும், ரிபப்ளிக் ஏர்வேஸ் 157 விமானங்களையும், அமெரிக்கன் ஏர்லைன்ஸ் 146 விமானங்களையும், யுனைடெட் ஏர்லைன்ஸ் 97 விமானங்களையும் ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளன.





