ஒன்ராறியோவில் திருடப்பட்ட நூற்றுக்கணக்கான வாகனங்கள் மீட்பு – அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
கனடாவின் Montreal துறைமுகத்தில் 390 கப்பல் கொள்கலன்களை சோதனை செய்த போது கிட்டத்தட்ட 600 திருடப்பட்ட வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளது.
மான்ட்ரியல் துறைமுகத்தில் 390 கப்பல் கொள்கலன்களை சோதனை செய்த போது கிட்டத்தட்ட 600 திருடப்பட்ட வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த வாகனகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதை கனேடிய அதிகாரிகள் புதன்கிழமை தடுத்ததாக தெரிவித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட 598 வாகனங்களில் பொரும்பான்னையானவைகள் 34.5 மில்லியன் கனேடிய டொலர் மதிப்பிலானவயாகும்.
அவை அண்டை மாகாணமான ஒன்டாரியோவில் திருடப்பட்டதாக ஒன்ராறியோ மாகாண பொலிஸ் மற்றும் கனடா எல்லைச் சேவை முகமை தெரிவித்தது.
கனடாவின் மிகப் பெரிய நகரமான டொராண்டோவில் வாகனத் திருட்டுகள் அதிகரித்திருப்பது பல குடியிருப்பாளர்களை விரக்தியடையச் செய்துள்ளது.
ஒன்ராறியோ மாகாண பொலிஸ் ஆணையர் மார்டி கியர்ன்ஸ், மாண்ட்ரீலில் நிருபர்களிடம் கூறுகையில், ஒன்ராறியோவில் உள்ள பொலிஸாரின் விசாரணைகள், அந்த மாகாணத்தில் திருடப்பட்ட வாகனங்களில் பெரும்பகுதி மான்ட்ரியல் துறைமுகம் வழியாக சட்டவிரோத ஏற்றுமதிக்கு தயார்ப்படுத்தப்பட்டவை என நம்பப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எங்கள் உளவுத்துறை சுட்டிக்காட்டியபடி, மீட்கப்பட்ட திருடப்பட்ட வாகனங்களில் பெரும்பாலானவை, 430 க்கும் அதிகமானவை, டொராண்டோ பகுதியில் இருந்து எடுக்கப்பட்டவை என மாகாண பொலிஸ் ஆணையர் கியர்ன்ஸ் தெரிவித்துள்ளார்.
ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் தென் அமெரிக்கா சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் உயர்தர பிக்கப் டிரக்குகள் மற்றும் எஸ்யூவிகள் உள்ளிட்ட ஒப்பீட்டளவில் புதிய வாகனங்களை திருடர்கள் குறிவைக்கின்றனர், என அவர் குறிப்பிட்டுள்ளார்.