பிளாக்பூலில் 90 மில்லியன் பவுண்ட் திட்டத்திற்காக 400 வீடுகள் இடிப்ப
இங்கிலாந்தின் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் ஒன்றான பிளாக்பூலில் (Blackpool), 90 மில்லியன் பவுண்ட் மதிப்பிலான மறுசீரமைப்புத் திட்டத்திற்காக 400 வீடுகள் இடிக்கப்படவுள்ளன.
வரும் கோடைகாலத்தில் தொடங்கவுள்ள இந்தத் திட்டத்தால், சுமார் 250 குழந்தைகள் உட்பட 800-க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்கள் தங்கள் வாழ்விடங்களை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது.
பழைய வீடுகளுக்குப் பதிலாக 230 புதிய நவீன வீடுகள் கட்டப்படும் என உள்ளூர் கவுன்சில் கூறினாலும், இது ஏழை மக்களை வீதியில் நிறுத்தும் செயல் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஏற்கனவே வீடுகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவும் நிலையில், வாடகை மற்றும் விலை உயர்ந்த புதிய வீடுகள் தங்களுக்கு எட்டாக்கனியாக இருக்கும் என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தங்களின் வாழ்வாதாரத்தையும், உணர்வுப்பூர்வமான வீடுகளையும் காக்க சட்ட ரீதியாகப் போராடப்போவதாகப் பாதிக்கப்பட்ட மக்கள் எச்சரித்துள்ளனர்.





