சுவிஸில் மனித உரிமைகள் மீறல்… ரஷ்ய அமைப்பு வெளியிட்டுள்ள செய்தி
ரஷ்ய அமைப்பு ஒன்று, சுவிட்சர்லாந்தில் மனித உரிமைகள் மீறல் நடப்பதாக ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ள விடயம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவை மையமாகக் கொண்டு இயங்கும் ரஷ்ய அமைப்பான Russian Mission in Geneva என்னும் அமைப்பு, ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த ட்வீட்டில் சர்ச்சைக்குரிய மூன்று விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
1. சுவிட்சர்லாந்தில் ரஷ்யர்கள் பாரபட்சமாக நடத்தப்படுகிறார்கள்.
2. சுவிட்சர்லாந்தில் பிரெஞ்சு மொழி பேசும் பகுதிகளில் அமைந்துள்ள சிறைச்சாலைகள் நிரம்பி வழிகின்றன.
3. சுவிட்சர்லாந்து, பேச்சுரிமையைக் கட்டுப்படுத்துகிறது.
🇷🇺 Russia at #HRC53:
🇨🇭We still have serious concerns over:
1️⃣ rising cases of discrimination against Russians in Switzerland;
2️⃣ overcrowding in a number of prisons in the Romanesque part of the country;
3️⃣ laws that unreasonably restrict the right to freedom of expression. pic.twitter.com/pgbNKeu59h
— Russian Mission in Geneva (@mission_russian) July 7, 2023
இந்த ட்வீட் சுவிஸ் அரசைக் குழப்பியுள்ளது. காரணம், எதற்காக இந்த ட்வீட் வெளியிடப்பட்டுள்ளது, இப்போது இப்படி ஒரு ட்வீட்டை அந்த ரஷ்ய அமைப்பு வெளியிடக் காரணம் என்ன என்பது யாருக்கும் தெரியவில்லை.
விடயம் என்னவென்றால், சுவிட்சர்லாந்தின் மனித உரிமைகள் குறித்து ஜெனீவாவிலுள்ள மனித உரிமைகள் கவுன்சிலில் தற்போது விவாதம் நடந்துவருகிறது.சரியாக இந்த நேரத்தில் இப்படி ஒரு ட்வீட் வெளியானதால் முக்கியஸ்தர்கள் குழப்பமடைந்துள்ளார்கள்.ஆனாலும், அரசியல்வாதிகள், மிகவும் கவனமாக அந்த ட்வீட் குறித்து விமர்சிப்பதை தவிர்த்துவருவகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது