பிடிக்காத வேலையை பிடித்து செய்வது எப்படி..?
வேலையை திருப்தி இல்லாமல் மனக்கவலையுடன் செய்வது பொதுவான பிரச்சினையாக பார்க்கப்படுகிறது. அமெரிக்கர்களிடையே இது குறித்த ஒரு ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அதில், மூன்றில் ஒரு பகுதியினர் தாங்கள் செய்யும் வேலை தங்களுக்கு பிடிக்கவில்லை என்று தெரிவிக்கின்றனர். நடைமுறையில், உங்க்ளுக்கு பிடிக்காத வேலையை பிடிக்க வைக்க சில வழிகள் இருக்கின்றன. செய்யும் வேலையில் திருப்தி அடைவது உங்களது மன அமைதிக்கும் உதவும்.
நம்மில் பலர் பிடிக்காத வேலையில் மாட்டிக்கொண்டது போன்ற உணர்வுடன் இருப்போம். ஒரு நாளில் 8 மணி நேரம் வேலை என்றால் அதில் ஒவ்வொரு நிமிடமாக எண்ணிக்கொண்டிருப்போம். திருப்தி இல்லாத வேலையை செய்வது உங்களது தனிப்பட்ட வாழ்க்கையையும் பாதிக்கும். ஆனால், இதை மாற்றியமைக்க ஒரு வழி இருக்கிறது. இதை உங்கள் வாழ்வில் தினசரி பயன்படுத்தினால் கண்டிப்பாக முன்னேற்றம் காணலாம்.
1. பிடித்தது, பிடிக்காதது, மாற்ற விரும்புவது என பட்டியலை தயார் செய்யுங்கள்!
நாம் செய்யும் வேலை நம் கையில் உள்ளது. இதை கட்டுப்படுத்துவதும் நம் கையிலேயே உள்ளது. இதில், நமது தினசரி வேலைகளில் நமக்கு பிடித்த, நாம் மகிழ்ச்சியை அனுபவிக்கும் வேலைகளை செய்ய வேண்டும். நமக்கு பிடிக்காத விஷயங்களை செய்வதை தவிர்க்க வேண்டும். இதை எப்படி செய்வது..?
மூன்று பட்டியலை தயார் செய்ய வேண்டும்: உங்களுக்கு உங்கள் வேலையில் பிடித்த விஷயங்கள் என்னென்ன என்பதை கண்டுபிடியுங்கள். உங்கள் வேலையில் எது பிடிக்காத விஷயம் என்பதை எழுதுங்கள். உங்கள் வேலையில், “இதை சேர்த்தால் நன்றாக இருக்கும்..” என்று கருதுவதை சேருங்கள். அது உங்களது வேலைக்கு தொடர்புடையதாக இல்லாததாக இருந்தாலும் சரி.
நீங்கள் தயாரித்த பட்டியலில் இருந்து ஒவ்வொன்றாக ஆராய ஆரம்பியுங்கள். சில மாற்றங்கள் இன்றியமையாததாக இருக்கும், அதற்கு உங்களுக்கு மேலிருப்பவரின் (முதலாளி) உதவி தேவைப்படும்.
உங்கள் பட்டியலில் நீங்கள் குறிப்பிட்டுள்ள மாற்றங்களால் உங்களை சுற்றியும் உங்களுக்குள்ளும் மாற்றங்கள் நிகழுகிறதா என்பதை பாருங்கள். இதையடுத்து எவ்வளவு குறைவாக உங்கள் வேலையை நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதை பாருங்கள்.
2.உடன் வேலை பார்ப்பவர்களுடனான் உறவு:
உங்களுடன் வேலை பார்ப்பவர்களை மாற்ற முடியாது என்றாலும் அவர்களுடன் உங்களுக்கு இருக்கும் உறவினை வலுப்படுத்தலாம். இது நீங்கள் திருப்திகரமாக வேலை பார்க்க உதவும்.
உங்களுடன் வேலை பார்ப்பவரை பற்றி நன்கு அறிந்து கொள்ளுங்கள். அவர்களின் கனவுகள் அல்லது லட்சியத்தை அடைய உங்களால் இயன்ற வரை உதவலாம்.
அதிக நேர மீட்டிங்குகளை தவிர்க்கலாம். அவர்களை சந்திக்கும் நேரங்களில் சீரியஸான விஷயத்தையும் சிரிப்புடன் கூறவும்.
அடிக்கடி சிரிப்பதும் அறட்டை அடிப்பதும் வேலைக்கு உலை வைத்துவிடும். ஆனால், அவர்களை நாளின் தொடக்கத்தில் பார்க்கும் போது ஒரு புன்னகை செய்யலாம், மாலை நேர இடைவேளை அல்லது மதிய உணவின் போது ஒன்றாக அமர்ந்து சிரித்து பேசி மகிழலாம். இது உடன் வேலை பார்ப்பவர்களுடனான உறவை வலுப்படுத்த உதவும்.
நேரம் கிடைக்கும் போது அவர்களிடம் பேசி அவர்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
வேலைக்கான நோக்கத்தினை மாற்றுதல்:
3.உங்கள் வேலை குறித்த உங்களது பார்வை…
நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனம் சமூகத்தில் எந்த வகையான தாக்கத்தை அல்லது மாற்றத்தினை ஏற்படுத்துகிறது என்பதை ஆராயலாம்.
நீங்கள் தற்போது உங்களது வேலையில் இருப்பதால் உங்கள் நிறுவனத்திற்கு எந்த வகையில் உதவியாக இருக்கிறது என்பதை பாருங்கள்.
4.சம்பளத்தை தாண்டி வேறு என்ன பயன் .?
நீங்கள் செய்யும் வேலை உங்கள் வாழ்வின் ஒரு பகுதி மட்டுமே. வேலை மட்டுமே உங்களது மகிழ்ச்சிக்கும் நிம்மதிக்கும் காரணம் என்று கூறிவிட முடியாது. வேலையை தாண்டி உங்களது தனிப்பட்ட வாழ்வில் நீங்கள் செய்யும் தினசரி நடவடிக்கைகள், உங்களது தனிப்பட்ட உறவு என அனைத்தையும் நீங்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். சம்பளம் வருகிறது என்பதற்காக மட்டும் ஒரு வேலையில் இருப்பது உங்களை நீங்களே முதுகில் குத்திக்கொள்வது பாேன்றது. பலருக்கு ஆரம்பத்தில் தான் பார்க்கும் வேலை பிடிப்பதில்லை. ஆனாலும் மேற்கூறிய விஷயங்களை பின்பற்றினாலே இதை மாற்றியமைக்க முடியும்.