செங்கடலில் கப்பல் போக்குவரத்தை நிறுத்திய ஹவுதி கிளர்ச்சியாளர்கள்!
செங்கடலில் கப்பல் போக்குவரத்தை நிறுத்திவைத்துள்ளதாக ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் சமிக்ஞை செய்வதாக ஏபிசி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலுக்கும் – ஹமாஸுக்கும் இடையிலான நிலையற்ற போர் நிறுத்தம் காரணமாக மேற்படி நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஹமாஸின் கஸ்ஸாம் (Qassam) படைப்பிரிவுகளுக்கு எழுதிய கடிதத்தில் அவர்கள் இந்த விடையத்தை சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறித்த கடிதத்தில், “நாங்கள் முன்னேற்றங்களை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம், மேலும் எதிரி காசா மீது மீண்டும் ஆக்கிரமிப்பைத் தொடங்கினால், ஆழமாக எங்கள் இராணுவ நடவடிக்கைகளுக்குத் திரும்புவோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செங்கடல் மற்றும் அரேபிய கடல்களில் இஸ்ரேலிய கப்பல் போக்குவரத்து மீதான தடையை மீண்டும் கொண்டுவருவோம் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டமைக்கான எந்த ஆதாரங்களையும் வெளியிடவில்லை.




