இலங்கையில் கோர விபத்து – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

இலங்கையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.
இன்று அதிகாலை 5.30 மணியளவில் துல்ஹிரிய பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அம்பேபுஸ்ஸவிலிருந்து அலவ்வ நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று துல்ஹிரிய பிரதேசத்தில் எதிர்திசையில் பயணித்த டிப்பர் ரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை (40), தாய் (39), மகன் (13) ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் ரம்புக்கணை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதியை வரகாபொல பொலிஸார் கைது செய்துள்ளதுடன் உயிரிழந்த மூவரின் சடலங்களும் வரகாபொல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
(Visited 13 times, 1 visits today)