ஹொரண துப்பாக்கிச் சூடு – வெளிநாடு தப்பிச் செல்ல முயற்சித்தவர் கைது
ஹொரண நகரில் இன்று பிற்பகல் கெப் வண்டியில் பயணித்த வர்த்தகர் ஒருவரை சுட்டுக் காயப்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் வெளிநாடு செல்ல முற்பட்ட போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் கண்காணிப்பு கடமையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். .
இன்று மதியம் 11.00 மணியளவில் ஹொரணை கட்டிடத்தில் இருந்து வெளியே வந்து கெப் வண்டியில் ஏறிய 35 வயதுடைய வர்த்தகர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் வர்த்தகர் காயமடைந்து தற்போது ஹொரண வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
கைத்துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதுடன், முதற்கட்ட விசாரணைகளின் போது அதனைச் செய்த நபர் வெளிநாட்டிற்குச் செல்வதாயின் தானியங்கி அடையாள அமைப்பை இலகுவாக அடையாளம் காணும் வகையில் உரிய தகவல்கள் வழங்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தனிப்பட்ட தகராறு காரணமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகத் தெரியவந்துள்ளதுடன், மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.