உலகம் செய்தி

இரண்டு மகள்களுடன் விமான விபத்தில் உயிரிழந்த ஹாலிவுட் நடிகர்

ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டியன் ஆலிவர் ஜெர்மனியில் பிறந்தவர். இவர் தனது இரண்டு குழந்தைகளுடன் சிறிய விமானத்தில் பயணம் செய்தார்.

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளாகி மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் கரீபியன் கடல் பகுதியில் நடந்துள்ளது.

தி குட் ஜெர்மன் (The Good German) என்ற படம் மூலம் அறிமுகம் ஆனார். 2008-ல் ஆக்ஷன்-காமெடி படமான ஸ்பீடு ரேஸர் (Speed Racer) படத்தில் நடத்தியிருந்தார்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கடற்படை அதிகாரிகள், மீனவர்கள், கடல் நீருக்கு அடியில் சென்று தேடும் வீரர்கள் உள்ளிட்டோர் தேடுதல் பணியில் ஈடுபட்டு நான்கு உடல்களை மீட்டுள்ளனர்.

ஆலிவர், அவரது மகள்கள் மதிதா (10), அன்னிக் (12) மற்றும் விமானி என நான்கு பேர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

விமானம் பெகுய்யா என்ன சிறிய தீவில் இருந்து செயின்ட் லூசியா புறப்பட்டபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

ஆரம்ப காலத்தில் டி.வி. தொடரில் நடித்தது பிரபலமானார். அதன்பின் ஆலிவர் 60-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

(Visited 10 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி