இந்தியாவிலும் இனங்காணப்பட்டுள்ள HMPV வைரஸ் : அச்சத்தில் மக்கள்!
சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் இந்தியாவில் முதன்முறையாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவின் பெங்களூரில் 8 மாத குழந்தை ஒன்று இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நுரையீரல் மற்றும் சுவாச மண்டலத்தை பாதிக்கும் இந்த வைரஸ் நிலை, சிறு குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்களை பாதிக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், இந்த வைரஸ் நிலைமை அவ்வளவு மோசமாக இருக்காது என்று இந்திய சுகாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
(Visited 45 times, 1 visits today)





