சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுத்தால் அதிக சம்பளம்!
சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்கும் நிறுவனங்கள் இனி உள்ளூர் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை உயர்திக்கொடுக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னர், வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்கும் நிறுவனங்கள் சிங்கப்பூர் ஊழியர்களுக்கு குறைந்தது S$1,400 சம்பளம் கொடுக்க வேண்டும் என்ற விதி இருந்தது.
இனி, அவ்வாறு செய்தால் உள்ளூர் ஊழியர்களுக்கு சம்பளமாக S$1,600 கொடுக்க வேண்டும் என அறிவிப்பு செய்யப்பட்டது. அதாவது 14 சதவீதம் அதிகரிக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புதிய மாற்றங்கள் வரும் ஜூலை 1, 2024 முதல் செயல்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.
அதே போல ஒரு மணிநேரத்திற்கு S$9 வெள்ளி என இருந்த பகுதிநேர ஊதியம் விரைவில் S$10.50 வெள்ளியாக மாற்றப்பட உள்ளது.
அதிகரித்து வரும் ஊதிய வளர்ச்சிக்கு ஏற்ப இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் லாரன்ஸ் வோங் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.
வெளிநாட்டு ஊழியர்களை பணியமர்த்தும் அனைத்து நிறுவனங்களும் உள்ளூர் ஊழியர்களுக்கு தகுதி ஊதியத்தை (LQS) வழங்க வேண்டும் என குறிப்பிடப்படுகின்றது.