இஸ்ரேலுக்கு எதிராக புதிய ஏவுகணைகளை தயார்ப்படுத்தும் ஹிஸ்புல்லா
ஹமாஸ் ஆயுதக் குழுவினருக்கு எதிராக தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலுக்கு எதிராக புதிய ஏவுகணைகளை பயன்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் சையத் ஹாசன் நசருல்லா எச்சரித்துள்ளார்.
ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு லெபனானின் தென் பகுதி எல்லையில் இருந்து அவ்வப்போது இஸ்ரேலுக்கு தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு இஸ்ரேல் படையினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், செய்தியாளா்களிடம் பேசிய ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நசருல்லா, இஸ்ரேல் போா் அண்டை நாடுகளுக்கு விரிவடைவதை அமெரிக்காவால் மட்டும் தடுக்க முடியும். ஆனால் அதை அமெரிக்க செய்யவில்லை.
காஸா மீதான தாக்குதல் நிறுத்தப்படும் வரையில், ஈராக், சிரியாவில் உள்ள அமெரிக்க ராணுவ படைகள் மீதான தாக்குதல் தொடரும்.
இஸ்ரேல் எல்லையில் அதிநவீன புர்கான் ராக்கெட்டை வீசி சனிக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது. அரை டன் வெடி மருந்து ஏற்படுத்தும் பாதிப்பை இந்த ராக்கெட் ஏற்படுத்தியது. மேலும் புதிய நவீன ஆயுதங்களையும் இஸ்ரேலுக்கு எதிராக பயன்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.