லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹெஸ்பொல்லா(Hezbollah) தளபதி மரணம்
தெற்கு லெபனானில் ஹெஸ்பொல்லாவின் (Hezbollah) மூத்த தளபதி ஒருவரைத் தாக்கி கொன்றதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஹெஸ்பொல்லாவின் தெற்கு முன்னணி தலைமையகத்தின் தளவாடத் தளபதி அப்பாஸ் ஹசன் கார்க்கி (Abbas Hassan Garki), நபாதியேவுக்கு (Nabatieh) அருகிலுள்ள தெற்கு நகரமான டவுலில் (Doul) ஒரு வாகனத்தின் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டதாக லெபனானின் தேசிய செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும், இந்த தாக்குதலில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாகவும் , இரண்டு பேர் காயமடைந்துள்ளதாகவும் லெபனானின் சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
அப்பாஸ் ஹசன் கார்க்கி, ஹெஸ்பொல்லாவின் தெற்கு முன்னணி என்று அழைக்கப்படும் பகுதியில் தளவாடத் தலைவராக இருந்தார், மேலும் சமீபத்திய ஆண்டுகளில் பயங்கரவாதக் குழுவில் மற்ற மூத்த பதவிகளை வகித்துள்ளார்.





