1152 மில்லியன் பெறுமதியான ஹெரோயின் இலங்கை கடற்படையினரால் மீட்பு
இலங்கை கடற்படையினர், இலங்கைக்கு மேற்கே சுமார் 110 கடல் மைல் (200கிமீ) தொலைவில் உள்ள கடலில் விசேட நடவடிக்கையின் போது, போதைப்பொருள் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் உள்ளூர் பல நாள் மீன்பிடி இழுவை படகு ஒன்றை மடக்கிப்பிடித்துள்ளனர்.
SLNS நந்திமித்ரா நடத்திய இந்த நடவடிக்கையின் விளைவாக, சட்டவிரோத நடவடிக்கையுடன் தொடர்புடைய 05 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
படகை காலி துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றபோது, விரிவான சோதனையில் 02 சாக்குகளில் அடைக்கப்பட்ட 40 பார்சல்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 46 கிலோ 116 கிராம் ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு 1152 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 23 முதல் 33 வயதுக்குட்பட்ட கந்தர பிரதேசத்தில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட 05 சந்தேக நபர்களும், ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் மீன்பிடி இழுவை படகும், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளன.