கொம்பனித்தெருவில் அதிரடி சோதனை -150 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்கள் பறிமுதல்
கொம்பனித்தெருவில் நடத்தப்பட்ட சோதனையின் போது,150 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹெரோயின், கொகைன் மற்றும் மெத்தம்பேட்டமைன் (ICE) உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மெத்தம்பேட்டமைன் (ICE) வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை முதலில் கைது செய்ததாகவும், அவர் வழங்கிய தகவலின் பேரில் மற்றவர்களை கைது செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசாரணையில் அவர்கள் நீண்ட காலமாக போதைப்பொருள் கடத்தல் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்ததாக தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்கள் வெள்ளவத்தை மற்றும் கடவத்தை பகுதிகளில் கைது செய்யப்பட்டனர்.





