சிங்கப்பூரில் வாடகை வீட்டில் இல்லாத குடும்பங்களுக்கும் கிடைக்கும் உதவி
சிங்கப்பூரில் ComLink+ திட்டம் மேலும் அதிகமான குடும்பங்களுக்கு உதவவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்போது அந்த உதவித் திட்டம் வாடகை வீட்டில் வசிக்கும் 10,000 குடும்பங்களுக்குக் கைகொடுக்கிறது.
இனி அது வாடகை வீட்டில் தங்காத மேலும் 3,000 குடும்பங்களுக்கு உதவும். அந்த விவரத்தைச் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு இன்று அறிவித்தது.
ComLink+ திட்டம் குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கு ஆதரவு அளிக்க அறிமுகப்படுத்தப்பட்டது.
வேலை தேடுதல், குழந்தைகளைப் பாலர்பள்ளியில் சேர்த்தல், கடனைக் கட்டுதல், வீட்டிற்குப் பணம் சேமித்தல் ஆகியவற்றுக்கு அது கைகொடுக்கும். KidSTART, UPLIFT திட்டங்களுக்குத் தகுதிபெறும் குடும்பங்கள் இனி ComLink+ திட்டத்திலும் பயன்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 9 times, 1 visits today)