ஐரோப்பா

ரஷ்யாவில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் : மருத்துவர்கள் உயிரிழப்பு!

ரஷ்யாவில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் மத்திய கிரோவ் பிராந்தியத்தில் விழுந்த Mi-2 ஹெலிகாப்டரில் ஒரு மருத்துவர் மற்றும் துணை மருத்துவர்கள் இருந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

விமானத்தில் இருந்த நான்கு பேரும் உயிரிழந்துள்ளதாக  அவசர அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரஷ்யாவின் அவசரகால அமைச்சகத்தின் ஆன்லைன் அறிக்கையின்படி, மாஸ்கோவிலிருந்து கிழக்கே 435 மைல் தொலைவில் உள்ள பெலீங்கி கிராமத்திற்கு அருகிலுள்ள காட்டில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்புக்குழுவினர் முதலில் விபத்து நடந்த இடத்தில் மூன்று உடல்களை மட்டுமே கண்டுபிடித்தனர், ஆனால் பின்னர் நான்காவது சடலத்தை கண்டுபிடித்ததாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விபத்துக்கான காரணம் அறிவிக்கப்படவில்லை. விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!