பிரித்தானியாவில் கடும் பனிப்பொழிவு – ஓடுப்பாதையை மூடிய விமான நிலையம்!
பிரித்தானியாவில் கடும் பனிப்பொழிவு காரணமாக விமான நிலையம் ஒன்றின் ஓடுபாதை இன்று காலை மூடப்பட்டது.
லிவர்பூல் ஜான் லெனான் (Liverpool John Lennon) விமான நிலையத்தின் ஓடுப்பாதையே இவ்வாறு மூடப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் தங்கள் திட்டங்களை மறு பரிசீலனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலைய ஊழியர்கள் தற்போது பனிக்கட்டிகளை அகற்ற முயற்சித்து வருவதாகவும், கூடிய விரைவில் சேவைகள் வழமைக்கு திரும்பும் என எதிர்பார்ப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல விமானங்கள் இரத்து செய்யப்பட்டதுடன், காலதாமதமும் ஆனதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.





