பிரான்ஸில் பல இடங்களுக்கு தீவிர பாதுகாப்பு – குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்
பிரான்ஸில் அனைத்து யூத வழிபாட்டுத் தலங்களுக்கும் சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் சிறப்பு கண்காணிப்பினை மேற்கொள்ள உள்துறை அமைச்சர் Gérald Darmanin அறிவித்துள்ளார்.
இஸ்ரேல்-பாலஸ்தீன யுத்தம் உச்சக்கட்டத்தை அடைந்த நிலையில், பிரான்சில் யூத மத தாக்குதல்களும் அதிகரித்துள்ளன.
அதையடுத்து, யூத வழிபாட்டுத் தலங்களில் தாக்குதல்கள் இடம்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே வழிபாட்டுத் தலங்களில் சிறப்பு கண்காணிப்பு இடம்பெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, உளவுத்துறை மிக தீவிரமாக செயற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 16 times, 1 visits today)





