நேபாளத்தில் கனமழை, நிலச்சரிவு ;14 பேர் உயிரிழப்பு

நேபாளத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கனந்த 24 மணிநேரத்தில் மட்டும் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.இது குறித்து தேசிய பேரிடர் மீட்புத்துறை அதிகாரிகள் கூறிகையில்,
நாடு முழுவதும் பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு உள்ளிட்ட பேரிடர்கள் ஏற்பட்டன.இதில் கடந்த 24 மணிநைரத்தில் 14 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 8பேர் நிலச்சரிவிலும் 5பேர் மின்னல் தாக்கியும் இறந்தனர்.ஒருவர் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்தார்.
இது தவிர கனமழை காரணமாக ஏற்பட்ட சம்பவங்களில் 10பேர் காயமடைந்தனர்,2 பேரை காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேபாளத்தில் அண்மை காலமாக பெய்து வரும் பருவமழையில் வழக்கத்தை விட அதிக உயிரிழப்புகள் ஏற்படுவதாக கைறப்படுகிறது.
(Visited 20 times, 1 visits today)