சீனாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவால் பெரும் சேதம் – மீட்பு நடவடிக்கைக்கு வலியுறுத்தல்

சீனாவின் பல மாகாணங்களில் பெய்துவரும் கனமழை, அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கிழக்கு, வடக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகள் இந்த பருவமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பீஜிங், ஹெபே, ஜீலின், மற்றும் ஷான்டாங் மாகாணங்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளன.
வீடுகள் மற்றும் சாலைகள் சேதமடைந்துள்ளன; மக்கள் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சீன அதிபர் ஷி ஜின்பிங், மக்கள் உயிர் மற்றும் சொத்துகளை பாதுகாக்க மீட்பு குழுக்கள் அனைத்தும் தீவிரமாக செயல்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அவசர நிவாரண உதவிகளை விரைவாக செயல்படுத்த அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தொடர்ந்தும் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை மேலும் மோசமாகலாம் என வானிலை அறிவிப்புகள் எச்சரிக்கையளித்துள்ளன.