தெற்கு ஸ்பெயினில் கனமழை மற்றும் வெள்ளத்தால் மக்கள் பாதிப்பு! 200 இற்கும் மேற்பட்டோர் பலி!

தெற்கு ஸ்பெயினில் கனமழையால் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில் 350க்கும் மேற்பட்ட வீடுகளில் வசித்து வந்த மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மலகா நகருக்கு அருகிலுள்ள காம்பனிலாஸ் கிராமத்தில் ஆறுகள் கரையை கடந்து வெள்ளம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் 365 வீடுகளை காலி செய்ய பிராந்திய அதிகாரிகள் உத்தரவிட்டனர். வெளியேற்றப்பட்டவர்கள் நகராட்சி விளையாட்டு அரங்கில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அண்டலூசியாவில் உள்ள 19 ஆறுகள் வெள்ள அபாய எச்சரிக்கையில் இருந்ததாக உள்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.
பெரும்பாலும் வலென்சியாவில் 233 பேர் உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
(Visited 1 times, 1 visits today)