ஒரே நாளில் கொட்டி தீர்த்த மழை : வெள்ளத்தில் சிக்கிய பிரித்தானிய மக்கள்!
பலத்த மழை மற்றும் பலத்த காற்று தொடர்ந்து புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதால், இங்கிலாந்தின் சில பகுதிகள் நேற்றைய தினம் (01.01) வெள்ளத்தில் மூழ்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு நாட்களில் கிட்டத்தட்ட ஒரு மாத மதிப்புள்ள மழை பெய்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் மான்செஸ்டர் பகுதியில் உள்ள பல சமூகங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக கூறப்படுகிறது.
நீரில் மூழ்கிய பகுதிகளில் சிக்கிய மக்களை மீட்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
“வெள்ள நிலைமை சீரடைவதற்குள் இன்னும் மோசமாகிவிடும் என எதிர்பார்ப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியாவில் 150 இற்கும் மேற்பட்ட பகுதிகளில் வெள்ள எச்சரிக்கை அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 1 times, 1 visits today)