சிட்னியில் பலத்த பாதுகாப்புடன் புத்தாண்டு கொண்டாட்டங்கள்
சிட்னியின் போண்டி (Bondi) கடற்கரையில் கடந்த டிசம்பர் 14-ஆம் திகதி ஹனுக்கா திருவிழாவின் போது நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, சிட்னி நகரம் மிக பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் புத்தாண்டை வரவேற்றுள்ளது.
15 பேர் பலியான அந்தத் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, 2,500-க்கும் மேற்பட்ட பொலிஸார் சிட்னி முழுவதும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
நவீன ரகத் துப்பாக்கிகளுடன் பொலிஸார் ரோந்து செல்வது ஆஸ்திரேலியாவில் ஒரு அரிய காட்சியாக இருந்தது.
நேற்று நள்ளிரவு 11 மணிக்கு, தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் வகையில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அப்போது சிட்னி ஹார்பர் பிரிட்ஜ் சமாதானத்தின் அடையாளமாக வெள்ளை நிற விளக்குகளால் ஒளிரவிடப்பட்டது.
இந்தத் தாக்குதல் மக்களின் இயல்பு வாழ்க்கையை மாற்றிவிடக் கூடாது என்றும், மக்கள் அச்சமின்றி புத்தாண்டைக் கொண்டாட வேண்டும் என்றும் நியூ சவுத் வேல்ஸ் மாநில முதல்வர் கிறிஸ் மின்ஸ் (Chris Minns) கேட்டுக்கொண்டார்.
கோடிக்கணக்கான மக்கள் நேரிலும் இணையத்திலும் பார்த்த உலகப் புகழ்பெற்ற சிட்னி வாணவேடிக்கை, இம்முறை துயரத்தையும் துணிச்சலையும் ஒருசேரப் பிரதிபலித்தது.





