ஆப்பிரிக்கா

நைஜீரியாவில் கால்நடை  வளர்போருக்கும், விவசாயிகளுக்கும் இடையே கடும் மோதல் – 85 பேர் பலி!

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கால்நடை வளர்ப்போருக்கும்இ விவசாயிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது.

அந்நாட்டின் மத்தியப் பகுதியில் விவசாய நிலத்தில் கால்நடை மேய்ந்தது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே பிரச்னை இருந்து வந்த நிலையில்,  திடீரென மோதல் ஏற்பட்டது. இதில் குடியிருப்புப் பகுதிகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.

மேலும் இரு தரப்பினரும் ஆயுதங்கள் மூலம் மாறி மாறி தாக்கிக் கொண்டதில் உயிரழந்தோர் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளதாக மங்கு மாவட்ட அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் ஆயிரத்துக்கு அதிகமானவர்கள் வீடுகளை இழந்து சாலைகளில் சுற்றித் திரிவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

VD

About Author

You may also like

ஆப்பிரிக்கா

வடக்கு காங்கோவில் 22 பேரை கடத்திய ஆயுதம் ஏந்திய குழுவினர்!

வடக்கு காங்கோவில் உள்ள கிராமமொன்றில் இருந்து குழந்தைகள் உள்பட 22 பேர் கடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஸ்-யூலே மாகாணத்தில் உள்ள அங்கோ பிரதேசத்தில் உள்ள நகரங்களை வெள்ளை இராணுவ
ஆப்பிரிக்கா

புர்கினோ பசோவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு!

புர்கினோ பசோவின் சில பகுதிகளுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜிஹாதிகளுக்கு எதிராக போராடுவதற்கும், ஆயுதப் படைகளின் நடவடிக்கைகளை எளிதாக்கும் வகையிலும் இந்த ஊரடங்கு
error: Content is protected !!