இன்றைய முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

அமெரிக்காவில் 10 கோடி பேரை வெப்ப அலை தாக்கும் அபாயம் – வானிலை மையம் எச்சரிக்கை

அமெரிக்காவில் இந்த ஆண்டில் மட்டும் சுமார் 10 கோடி மக்கள் கடுமையான வெப்ப அலை தாக்குதலுக்குள்ளாகும் அபாயம் இருப்பதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

வட கரோலினா, வாஷிங்டன் டி.சி. உள்ளிட்ட மாநிலங்களில் 45 பாகை வரை வெப்பநிலை பதிவாகியுள்ள நிலையில், பல இடங்களில் வெயிலின் தாக்கம் பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

வாஷிங்டன் டி.சி யில் வெப்பநிலை 43 பாகை வரை உயர்ந்துள்ளது. கடும் வெப்பத்தால் வயதானவர்கள், சிறுவர் மற்றும் உடல் நலக்குறைவுள்ளவர்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இன்று வரை இந்த வெப்ப அலை நீடிக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பொதுமக்கள் அவசியமின்றி வெளியே செல்ல வேண்டாம் என்றும், தண்ணீரை அதிகம் அருந்தி, குளிரான இடங்களில் இருக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மாநிலங்களில் பல மருத்துவமனைகள் அவசர சிகிச்சை பிரிவுகளை தயார் நிலையில் வைத்துள்ளன. இந்த வெப்ப அலை கடந்த சில ஆண்டுகளில் அமெரிக்கா சந்தித்துள்ள தீவிரமான சூழ்நிலைகளில் ஒன்றாகும் கருதப்படுகிறது.

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!