சீன மக்களை அச்சுறுத்தும் வெப்பம் – வீடுகளை விட்டு வௌியே வர வேண்டாம் என எச்சரிக்கை
சீனா தலைநகர் பெய்ஜிங் உள்பட பல நகரங்களில் கடும் வெப்பம் நிலவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மக்கள் வீடுகளை விட்டு வௌியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஆசிய நாடுகள் பலவும் கடந்த சில நாட்களாக கடும் வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சீனாவிலும் சில தினங்களாக வெப்பம் மக்களை வாட்டி வருகிறது.
தெற்கு பெய்ஜிங்கின் நான்ஜியவோ ஆய்வகத்தில் முதல்முறையாக கடந்த 3 நாட்களாக தொடர்ந்து 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது.
பெய்ஜிங்கில் 41.1 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. இது தலைநகரில் இம்மாதத்தில் பதிவாகியுள்ள அதிகபட்ச வெப்பம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் மக்கள் வீடுகளை விட்டு வௌியே வர வேண்டாம். வௌியில் பொதுஇடங்களில் நீண்ட நேரம் சுற்ற வேண்டாம். அனைவரும் வெப்ப தாக்கத்திலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.