அமெரிக்காவை வாட்டி வதைக்கும் வெப்பம் – நிவ்யோர்க் மக்கள் கடுமையாக பாதிப்பு

அமெரிக்காவை பாதித்துள்ள வெப்பமான காலநிலையால் நிவ்யோர்க் வாசிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, 175 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்க குடியிருப்பாளர்களுக்கு அதிக வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நிவ்யோர்க் நகரில் தொடர்ந்து பல நாட்களாக 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி வருகிறது.
வெளி நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிக வெப்பநிலையால் அதிகம் பாதிக்கப்படலாம் என தொடர்புடைய அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஜூன் மாதம், 1850-க்குப் பிறகு அமெரிக்காவில் பதிவான வெப்பமான ஜூன் மாதமாக பதிவாகியுள்ளது.
(Visited 17 times, 1 visits today)