ஹரியானா தொழிற்சாலை குண்டுவெடிப்பு – சிகிச்சை பலனின்றி 6 தொழிலாளர்கள் பலி
கடந்த வாரம் ஹரியானாவில் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்ததில் காயமடைந்த 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர், மேலும் 10 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.
முதல்வர் நயாப் சிங் சைனி, ரோஹ்டக்கில் உள்ள பிஜிஐஎம்எஸ் மருத்துவமனையில் மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து, இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ₹ 5 லட்சம் நிதியுதவி அறிவித்தார்.
காயமடைந்தவர்களில் நான்கு பேர் செவ்வாய்க்கிழமை இரவு இறந்தனர்.
32 வயதான ஜய், 27 வயதான ராமு, 38 வயதான ராஜேஷ் மற்றும் 37 வயதான விஜய் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் இறந்ததாக , இன்ஸ்பெக்டர் ஜகதீஷ் சந்தர் கூறினார்.
30 வயதுக்கு உட்பட்ட மேலும் இரு தொழிலாளர்கள் அடுத்தநாள் உயிரிழந்தனர்.
மார்ச் 16 அன்று தாருஹேரா தொழிற்பேட்டையில் உள்ள உற்பத்தி நிலையத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது, இதில் 40 தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.