இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

மகளுக்காக நீதி கோரும் லண்டனில் உயிரிழந்த ஹர்ஷிதா பிரெல்லாவின் தாய்

கிழக்கு லண்டனில் காரில் சடலமாக மீட்கப்பட்ட ஹர்ஷிதா பிரெல்லாவின் தாய், “என் மகளுக்கு நீதி வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

ஹர்ஷிதா பிரெல்லாவின் தாயார் சுதேஷ் குமாரி, டெல்லியில் உள்ள குடும்ப வீட்டில் இருந்து கண்ணீருடன் இதனை தெரிவித்துள்ளார்.

பங்கஜ் லம்பாவுடன் நிச்சயிக்கப்பட்ட திருமணத்திற்குப் பிறகு, ஏப்ரலில் பிரிட்டனுக்குச் செல்வதில் பிரெல்லா “மிகவும் உற்சாகமாக” இருந்ததாக அவரது சகோதரி சோனியா தபாஸ் தெரிவித்தார்.

ஹர்ஷிதா பிரெல்லாவின் தந்தை சத்பீர் பிரெல்லா, “எனது மருமகனை நீதியின் முன் நிறுத்த வேண்டும், என் மகளின் உடலை வீட்டிற்கு கொண்டு வர வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

அவரது தந்தை தனது மகளை எளிமையான மற்றும் தீவிரமான இளம் பெண் என்று விவரித்தார். அவர் ஒரு ஆசிரியராக விரும்புவதாகவும், தனது சொந்தப் படிப்பிற்குத் திரும்புவதற்கு முன், டெல்லியில் உள்ள அவர்களது வீட்டில் குழந்தைகளுக்குப் பயிற்சி அளிப்பதில் தனது நாட்களைக் செலவிட்டதாக தெரிவித்தார்.

கடைசியாக நவம்பர் 10 ஆம் தேதி திருமதி பிரெல்லாவுடன் தொலைபேசியில் பேசியதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

அவள் இரவு உணவைச் செய்துவிட்டதாகவும், கணவர் பங்கஜ் லம்பா வீட்டிற்கு வருவதற்காகக் காத்திருப்பதாகவும் அவள் சொன்னதாக, அவளுடைய சகோதரி தெரிவித்தார்.

அடுத்த இரண்டு நாட்களுக்கு தனது சகோதரியின் ஃபோன் செயலிழந்துவிட்டதாகவும், நவம்பர் 13 ஆம் தேதிக்குள் அவர்கள் “ஏதோ தவறாக இருப்பதாக” நினைத்ததாகவும், தங்களுக்குத் தெரிந்தவர்களிடம் புகார் அளிக்குமாறும் கேட்டுக் கொண்டதாக சோனியா தபாஸ் குறிப்பிட்டார்.

ஹர்ஷிதா பிரெல்லா மற்றும் பங்கஜ் லம்பா 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சட்டப்பூர்வ திருமணத்துடன் நிச்சயிக்கப்பட்ட திருமணம் செய்து கொண்டனர்.

மேலும் தனது சகோதரி லண்டனில் மிகவும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழவில்லை என்றும் கணவரால் அவள் மிகவும் கஷ்டப்பட்டாள் என்றும் சகோதரி சோனியா தபாஸ் தெரிவித்தார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!