ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த ஹாரி புரூக்!

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் ஹாரி புரூக் சதமடித்து அசத்தினார்.
போட்டியில் சதத்தை எட்டிய ஹாரி புரூக் இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.
ஹாரி புரூக் (25 வயது 215 நாட்கள்) ஒருநாள் போட்டியில் சதம் அடித்த இளம் இங்கிலாந்து கேப்டன் என்ற சிறப்பை பெற்றார்.
இதற்கு முன்பு அலஸ்டயர் குக் 26 வயது 190 நாட்களில் சதம் அடித்ததே இந்த வகையில் சாதனையாக இருந்தது.
தற்போது அந்த சாதனையைத் தகர்த்துள்ள ஹாரி புரூக் புதிய சாதனை படைத்துள்ளார்.
(Visited 33 times, 1 visits today)