மனுஷ- ஹரின் மீது உயர்நீதிமன்றில் அடிப்படை மனித உரிமை மனுத்தாக்கல்
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் உயர்நீதிமன்றில் அடிப்படை மனித உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளனர்.
தங்களுடைய கட்சி உறுப்புரிமை இரத்து செய்யப்பட்டமை மற்றும் தம்மை பாராளுமன்றிலிருந்து நீக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி மேற்கொண்டுள்ள தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி இந்த மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜூலை மாதம், அமைச்சர்களான மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ இருவரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தில் இணைந்ததையடுத்து கட்சியில் இருந்து நீக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு தீர்மானித்தது.
அதன் பின்னர், ஆகஸ்ட் மாதம், ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு முன்னர் விதிக்கப்பட்ட இடைநிறுத்தத்தை நீக்குவதற்கு ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) செயற்குழு தீர்மானித்தது.என்பதும் குறிப்பிடத்தக்கது.