அறிவியல் & தொழில்நுட்பம்

WhatsApp பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

WhatsApp ஆனது தரமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து கொள்ளும் அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

மெட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் ஜூக்கர்பெர்க், WhatsApp செயலில் எச்டி புகைப்படங்களை அனுப்பமுடியும் என்றும், விரைவில் எச்டி வீடியோவையும் பகிர்ந்து கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.

அதன்படி, புகைப்படங்களை எச்டியில் அனுப்பும் அம்சம் அறிமுகமானது. இதே போல வீடியோவிலும் அறிமுகமாகும் என்று கூறப்பட்ட நிலையில், அதுவும் அறிமுகமாகியுள்ளது.

இனி புகைப்படங்களை மட்டுமல்லாமல் வீடியோவையும் எச்டியில் அனுப்பலாம். இதற்கு முதலில் நீங்கல் அனுப்ப நினைக்கும் புகைப்படம் அல்லது வீடியோ எச்டியில் இருக்க வேண்டும்.

அவ்வாறு இருக்கும் பட்சத்தில், அந்த போட்டோ அல்லது வீடியோவை செலக்ட் செய்ய வேண்டும். பிறகு மேல் புறத்தில் இருக்கும் வசதிகளில் எச்டி என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

அதை கிளிக் செய்தவுடன் உங்களுக்கு இரண்டு தேர்வுகள் வரும். அதில் எந்த அளவு தெளிவுடன் அந்த வீடியோ அல்லது புகைப்படத்தை அனுப்ப வேண்டும் என்று செலக்ட் செய்து விட்டு, ஒகே என்பதை கிளிக் செய்ய வேண்டும். இப்பொழுது நீங்கள் அனுப்பும் வீடியோ அல்லது புகைப்படம் அல்லது எச்டியில் இருக்கும்.

மேலும், சமீபத்தில் பல புதிய அப்டேட்களை வெளியிட்டது. அதில் வீடியோ மெசேஜ், சைலன்ஸ் அன்நோன் நம்பர்ஸ், குரூப் வீடியோ கால், மெசேஜ் எடிட், வாய்ஸ் சேட், ஸ்கிரீன் ஷேரிங் போன்ற அம்சங்கள் அடங்கும். இதற்கிடையில் வேறு சில அம்சங்களையும் சோதித்து வருகிறது. அந்தவகையில், ஒரு மொபைல் போனில் பல வாட்ஸ்அப் கணக்குகளை பயன்படுத்தும் அம்சத்தை விரைவில் வெளியிடக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 9 times, 1 visits today)

SR

About Author

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்