டுவிட்டர் Blue tick பயனர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் – பணம் சம்பாதிக்கும் வசதி அறிமுகம்
டுவிட்டர் Blue tick பயனர்களுக்கு மூலம் இனி விளம்பரம் மூலம் பணம் சம்பாதிக்கும் வசதி அறிமுகமாகியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமாக இருக்கும் டுவிட்டர் நிறுவனத்தை உலக பணக்காரர்களில் முக்கியமானவரான எலான் மஸ்க் வாங்கிய பிறகு அதில் பல்வேறு அதிரடி மாற்றங்களை அமல்படுத்தி வருகிறார்.
Blue tick பயனர்களுக்கு கட்டணம். விரைவில் கால் பேசும் வசதி என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
அண்மையில் தான் டுவிட்டர் நிர்வாகத்திற்கு லிண்டா யாக்காரினோவை புதிய தலைமை அதிகாரியாக நியமித்தார் எலான் மஸ்க்.
தற்போது புதிய அறிவிப்பாக டுவிட்டரில் Blue tick வாங்கியுள்ள அதிகாரபூர்வ கணக்கு வைத்து இருக்கும் பயனர்கள் பயன்பெறும் வகையில் புதிய திட்டத்தை அறிவித்து உள்ளது ட்வீட்டர்.
அதில், டிவிட்டர் Blue tick பயனர்கள் பக்கத்தில் மெசேஜ் பகுதியில் விளம்பரங்கள் காட்டப்படும். அந்த விளம்பரத்தின் ரீச் (எத்தனை டிவிட்டர் பயனர்களுக்கு செல்கிறது) என்பதை பொறுத்து அவர்களுக்கு டிவிட்டர் பணம் கொடுக்க உள்ளது இதற்காக, 5 மில்லியன் அமெரிக்கன் டொலரை டிவிட்டர் நிர்வாகம் ஒதுக்கியுள்ளது.