மாவீரர் துயிலும் இல்லங்களை தமிழர்களிடம் ஒப்படையுங்கள்!
வடக்கு, கிழக்கிலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை தமிழ் மக்களிடம் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் க. கோடீஸ்வரன் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் இன்று (13) நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.
“ ஜே.வி.பியின் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் கார்த்திகை வீரர்கள் தினம் இன்று (13) நினைவு கூறப்படுகின்றது.
இடதுசாரி கொள்கையுடன் போராடிய வீரன் என்ற அடிப்படையில் நானும் அஞ்சலி செலுத்துகின்றேன்.
கார்த்திகை மாதத்தில் வடக்கு, கிழக்கில் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
வடக்கு, கிழக்கில் 32 இற்கு மேற்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்கள் உள்ளன. அந்த புனிதமான இடங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
மாவீரர் துயிலும் இல்லங்களை வடக்க, கிழக்கில் வாழும் தமிழ் மக்களிடம் பொறுப்பு கொடுக்க வேண்டும் . இடங்களை அங்கீகரிக்க வேண்டும்.
அந்த இடங்களில் இருந்து இராணுவத்தை அகற்ற வேண்டும். மக்கள் சுதந்திரமாக நினைவு கூறுவதற்கு இடமளிக்க வேண்டும்.” எனவும் கோடீஸ்வரன் எம்.பி. குறிப்பிட்டார்.





