ஹமாஸின் நிலத்தடி சுரங்க பாதை சுக்கு நூறாகியது!- அதிர்ச்சி கொடுத்த இஸ்ரேலின் தீவிர நடவடிக்கை

காசாவில் ஹமாஸ் அமைப்பினரின் 2 நிலத்தடி சுரங்கப் பாதைகளை இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் முழுமையாக அழித்துள்ளனர்.
இந்த சுரங்கங்களில் இருந்து ஆயுதங்கள், உணவுப்பொருட்கள் மற்றும் குடியிருப்புத் தளங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல்–ஹமாஸ் மோதல் நீடித்து வருகிற சூழ்நிலையில், இரு தரப்புக்குள்ளேயான போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் பல தடவைகள் தோல்வியடைந்துள்ளன. இதனையடுத்து, இஸ்ரேல் காசாவில் தனது ராணுவ நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள வீடியோ மற்றும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“ஹமாஸ் கட்டுப்பாட்டில் இருந்த இரண்டு முக்கிய சுரங்கங்கள் அகற்றப்பட்டுள்ளன. ஒன்று கான்கிரீட் அமைப்புடன் நிரந்தரமாக கட்டப்பட்டிருந்தது; மற்றொன்று நூற்றுக்கணக்கான மீட்டர் நீளத்தில் நிலத்தடியில் புதைந்திருந்தது. இரண்டிலும் ஆயுதங்கள் மற்றும் வசிப்பிட வசதிகள் இருந்தன. இந்நடவடிக்கையின் போது 10க்கும் மேற்பட்ட ஹமாஸ் பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.”
இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியதாவது:
“எங்கள் போர் ஹமாஸ் பயங்கரவாதிகளுடனே மட்டுமே. அவர்கள் கைதடித்து வைத்துள்ள இஸ்ரேல் குடிமக்கள் வீடு திரும்பும் வரை இந்த நடவடிக்கைகள் தொடரும்.”
இந்த சுரங்க அகற்றம், ஹமாஸ் அமைப்பின் உள்கட்டமைப்பை முற்றிலும் முறியடிக்கும் நடவடிக்கையாகவும், எதிர்வரும் தாக்குதல்களுக்கு தடையாகவும் அமையும் என இஸ்ரேல் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.