லெபனான் மீதான இஸ்ரேலிய தாக்குதலுக்கு ஹமாஸ் கண்டனம்
தெற்கு லெபனானில்(Lebanon) இஸ்ரேலின் தாக்குதல்கள் நிராயுதபாணியான பொதுமக்களை குறிவைத்து நடத்தப்பட்டதாகவும், அது ஒரு போர்க்குற்றம் என்றும் பாலஸ்தீன குழுவான ஹமாஸ்(Hamas) தெரிவித்துள்ளது.
தாக்குதலை தொடர்ந்து டெலிகிராமில் பகிரப்பட்ட ஒரு அறிக்கையில், ஹமாஸ் தலைவர் அலி பராகா(Ali Baraka), லெபனானுடன் ஹமாஸின் முழு ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளார்.
ஆக்கிரமிப்பை எதிர்கொள்ளவும், பொதுமக்களுக்கு எதிரான ஆக்கிரமிப்பின் குற்றங்களை நிறுத்தவும் ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும், தாக்குதலுக்கு இஸ்ரேலிய தலைவர்களை பொறுப்புக்கூற வைத்து நாட்டின் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு ஐ.நா.வையும்(UN), அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளையும் அலி பராகா வலியுறுத்தியுள்ளார்.
தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேலிய இராணுவம் தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தியதை தொடர்ந்து ஹமாஸின் இந்த கண்டனம் வெளிவந்துள்ளது.





