விதிமுறைகளை மீறி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஹமாஸ்
ஹமாஸ் போராளிகள் போர் நிறுத்த விதிமுறைகளை மீறி இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான தற்காலிக போர் நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது.
இந்நிலையில், ஹமாஸ் போராளிகள் போர் நிறுத்த விதிமுறைகளை மீறி இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல்களை நடத்தினர்.
இந்த போர் நிறுத்தம் நான்கு நாள் போர் நிறுத்தமாக கடந்த 24ம் திகதி தொடங்கியது.
அதன்பிறகு, இரு தரப்புக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததன் விளைவாக, போர் நிறுத்தம் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போராளிகளை போர்நிறுத்தத்திற்கு ஒப்புக் கொள்ள வைத்தது கத்தார் தான்.
எனினும், ஹமாஸின் ராக்கெட் தாக்குதல் போர் நிறுத்தம் தொடர்பான நிபந்தனைகளை மீறிய செயல் என்றும், காஸா பகுதியில் ஹமாஸ் தீவிரவாதிகளை குறிவைத்து மீண்டும் தாக்குதல்களை தொடங்கியுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.