ஹக்கல தேசிய தாவரவியல் பூங்கா மீண்டும் திறப்பு
ஹக்கல தேசிய தாவரவியல் பூங்கா இன்று முதல் சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வழங்கிய பரிந்துரைகளின்படி சில பகுதிகள், குறிப்பாக நுழைவு வாயிலுக்கு அருகிலுள்ள குளப் பகுதி மற்றும் பாதை பகுதிகளில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, பணியாளர்கள் விசேட உதவித் திட்டத்தையும் செயற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
டிட்வா புயலால் ஏற்பட்ட பேரிடர் நிலைமை காரணமாக ஹக்கல தாவரவியல் பூங்கா மூடப்பட்டிருந்தது,
மேலும் இது மிகக் குறுகிய காலத்திற்குள் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக வெற்றிகரமாக மீண்டும் திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




