அமெரிக்காவின் அடுத்த இலக்காக மாறும் கிரீன்லாந்து : அவசரமாக விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!
வெனிசுலாவை அமெரிக்கா ஆக்கிரமித்துள்ள நிலையில், கீரீன்லாந்தை கைப்பற்றக்கூடும் என்ற அச்சம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் இது தொடர்பில் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்த டென்மார்க் பிரதமர் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பில் டென்மார்க் பிரதமர் மெட் ஃபிரடெரிக்சன் (Mette Frederiksen) எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அமெரிக்கா கிரீன்லாந்தை கைப்பற்ற வேண்டும் என்று பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை.
டென்மார்க் இராச்சியத்தில் உள்ள மூன்று நாடுகளில் ஒன்றை இணைக்க அமெரிக்காவிற்கு எந்த உரிமையும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ்-ஃபிரடெரிக் நீல்சனும் (Jens-Frederik Nielsen) ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், எங்கள் நாடு வல்லரசு சொல்லாட்சிக்கான பொருள் அல்ல. இது ஒரு ஜனநாயக நாடு. இது மதிக்கப்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கிரீன்லாந்து அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு நிச்சயமாக தேவை எனக் குறிப்பிட்டுள்ளார். தேவைப்பட்டால் இராணுவ பலத்தை பிரயோகிக்க அமெரிக்கா தயங்காது என்றும் அறிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





