இத்தாலி நாட்டுக்கு உட்பட்ட தீவு முழுவதும் புலம்பெயர்ந்தோரின் சடலங்கள் கொண்ட கல்லறைகள்

இத்தாலியின் தெற்கு பகுதியில் உள்ள லம்படுசா தீவு முழுவதும் கல்லறைகள் மாத்திரம் காட்சி கொடுப்பதாக தெரியவந்துள்ளது.
அங்கு ஆப்பிரிக்காவிலிருந்து சட்டவிரோதமாக ஐரோப்பாவுக்கு புலம்பெயரும் மக்கள், படகு விபத்தில் சிக்கி உயிரிழந்தால் உடல்களை அடக்கம் செய்யும் இடமாக மாறியுள்ளது.
6 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட இந்த தீவில் அடங்கிய குறிப்பிட்ட பகுதியில், அடையாளம் தெரியாத புலம்பெயர்ந்தோர் உடல்கள் அடக்கம் செய்யப்படுகின்றன.
இவ்வாறு உடல்கள் புதைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கல்லறைகள் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பரந்து காணப்படுகிறது.
(Visited 6 times, 1 visits today)